செய்திகள் :

"ஆடிப்பெருக்கு அப்போ தண்ணி எப்படி வந்தது? கர்நாடக அரசு நமக்கு.!" - சௌமியா அன்புமணி உரை

post image

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய சௌமியா அன்புமணி, " தமிழ்நாட்டிற்கு உரிய 175 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு அட்டவணைப்போட்டு சரியான நேரத்திற்கு நமக்கு வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் இதுவரைக்கும் அவர்கள் அப்படி செய்ததே கிடையாது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கவே இல்லை.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

தண்ணீர் சரியாகத் திறந்துவிடாதக் காரணத்தினால் தான் குறுவை சாகுப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது.

நமக்கு தரவேண்டிய தண்ணீரை அவர்கள் கொடுக்கவில்லை. ஆடிப்பெருக்கு அன்று மட்டும் எப்படி தண்ணீர் வந்தது. அந்தத் தண்ணீர் கர்நாடக அரசு நமக்கு தரவில்லை.

கேரளாவில் அதிகமான மழை பெய்ததன் விளைவாக கபினி அணை நிரம்பியதால் தான் உபரிநீராக தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து வரும் தண்ணீர் தான் அது. வேறு வழியில்லாமல் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்துள்ளது.

அதிகமான வெள்ள நீர் ஊருக்குள் வந்து பாதிப்படையக்கூடாது என்று தான் அவர்கள் அந்தத் தண்ணீரை திறந்துவிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்திற்கு ஒரு துளி தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் அவர்கள் மேகதாது அணையை கட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

தமிழகத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் அளவில் தான் இந்த அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அணை கட்டினால் வன விலங்குகள் மட்டுமல்லாமல், இயற்கை வளங்கள் முழுவதும் அழிந்து விடும். பல்வேறு வழக்குகள் முன்வைத்து இந்த அணை கட்டுவதற்கு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை" என்று தெரிவித்திருக்கிறார்.

2021 - 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மாநிலங்களவை உறுப்பினர்களா... மேலும் பார்க்க

`அது பழைய காலம்... நீங்கள் பாட்டுக்கு பேசினால் எப்படி? நிரூபியுங்கள்' - திடீரென கொந்தளித்த ஆனந்த்

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "நிதியமைச்சர் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட்டை அறிவித்தார். வேளாண் அமைச்ச... மேலும் பார்க்க

"தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது எதிர்ப்பதற்கு?" - அமைச்சர் ரமேஷ் கிண்டல்

த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று முழுதாக மூன்று மாதங்கள் முடியவில்லை. அதற்குள்ளாக பல்வேறு துறை சார்ந்த சர்ச்சைகளும் சலங்கை கட்டி ஆடுகின்றன. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் நடப... மேலும் பார்க்க

"இங்கு நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம், அமைச்சர் சம்பந்தமே இல்லாமல்.!" - உதயநிதி, சிடிஆர் வாதம்

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், " மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியா... மேலும் பார்க்க

"அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்?"- உதயநிதி கேள்வி

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலைய... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கியவரை உயிரை கொடுத்து காப்பாற்றிய மீட்ப்புப் பணியாளர் - உடலை அவமதித்த அதிகாரிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லியூர் கிழக்கே தெற்றிவிளைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கண்ணூர் செறுபுழா மீந்துள்ளி பகுதியில் நீச்சல் பயிற்சியாளராகவும், மீட்புப்பணியாளராகவும் பணிபுரிந்துவந்தார். கேரளத்தில்... மேலும் பார்க்க