செய்திகள் :

``என் அனுமதியின்றியே பாஜக தலைவர்கள் என் புகைப்படத்தை வெளியிட்டார்கள்" - சோனம் வான்சுக்

post image

மத்திய அரசைக் கண்டித்து சிஜேபி முன்னெடுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக். அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், சோனம் வங்சுக் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில், ``எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்பே எனது உண்ணாவிரதத்தை முடிக்க நாங்கள் பரிசீலித்தோம். அதற்காகவே ராகுல் காந்தியை தொடர்புகொள்ள அனைத்து வழிகளிலும் என் மனைவி கீதாஞ்சலி முயற்சி செய்தார். அவர் ராகுலுக்கு எதிரானவர் அல்ல. ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து நேர்மறையான பதில் எதுவும் வரவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைமை குறித்த எனது மனைவியின் கருத்துகள் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.

ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் தலைவர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வதே எனது தொடக்க திட்டமாக இருந்தது. உண்ணாவிரதத்தை முடிக்க மத்திய அமைச்சர்கள் நள்ளிரவுக்குப் பிறகு வந்தபோது, `எனது அறிவிப்புக்கு முன் எந்தப் படங்களையும் வெளியிடக் கூடாது, எதிர்க்கட்சித் தலைவர்களின் படங்களுடன் எனது இந்தச் செய்தி வெளியிடப்படும்' என்று அவர்களிடம் சொன்னேன்.

ஆனால், அதற்கு முன்பே மத்திய அமைச்சர்களுடனான எனது சந்திப்பின் புகைப்படங்களை வெளியிட்டுவிட்டார்கள். நான் அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மதிக்கப்படவில்லை. அந்த வாக்குறுதி மீறப்பட்டது. இது போன்ற சம்பவங்களால் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மீதான எனது நம்பிக்கையும் போய்விட்டது.'' என்றார்.

சோனம் வாங்சுக் - கீதாஞ்சலி ஆங்மோ
சோனம் வாங்சுக் - கீதாஞ்சலி ஆங்மோ

மத்திய அரசுடன் பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த வாங்சுக், ``பேரம் பேசுவதுதான் எனது நோக்கமாக இருந்திருந்தால், இதைவிடப் பெரிய பேரங்களைச் செய்திருக்க முடியும். என்னை மத்தியக் கல்வி அமைச்சராக்கச் சொல்லிக் கேட்டிருக்கலாம் அல்லது வேறு எதையாவது கோரியிருக்கலாம். பேரம் பேசுவதுதான் எனது நோக்கமாக இருந்தால், நான் 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்திருக்க மாட்டேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றியது உங்கள் தலைவர்தான்"- ரகுபதிக்கு மரிய வில்சன் பதிலடி

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "அப்பாவைக் காணோம் எனப் பேசுகிறீர்களே... மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், ... மேலும் பார்க்க

அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது. ஈரானும் சரி... அமெரிக்காவும் சரி... இப்போது வரை சளைத்ததாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன. ஈரான் ... மேலும் பார்க்க

2021 - 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மாநிலங்களவை உறுப்பினர்களா... மேலும் பார்க்க

`அது பழைய காலம்... நீங்கள் பாட்டுக்கு பேசினால் எப்படி? நிரூபியுங்கள்' - திடீரென கொந்தளித்த ஆனந்த்

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "நிதியமைச்சர் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட்டை அறிவித்தார். வேளாண் அமைச்ச... மேலும் பார்க்க

"ஆடிப்பெருக்கு அப்போ தண்ணி எப்படி வந்தது? கர்நாடக அரசு நமக்கு.!" - சௌமியா அன்புமணி உரை

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய சௌமியா அன்புமணி, " தமிழ்நாட்டிற்கு உரிய 175 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு அட்டவணைப்போட்டு... மேலும் பார்க்க

"தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது எதிர்ப்பதற்கு?" - அமைச்சர் ரமேஷ் கிண்டல்

த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று முழுதாக மூன்று மாதங்கள் முடியவில்லை. அதற்குள்ளாக பல்வேறு துறை சார்ந்த சர்ச்சைகளும் சலங்கை கட்டி ஆடுகின்றன. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் நடப... மேலும் பார்க்க