செய்திகள் :

"டெஸ்ட் போட்டிகளில் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர் நீங்கள்தான்" - ரஹானே குறித்து விராட் கோலி

post image

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை.30) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஹானே குறித்து உடன் பயணித்த ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.

விராட் கோலி - ரஹானே - ரோஹித்
விராட் கோலி - ரஹானே - ரோஹித்

ரோஹித் சர்மா வெளியிட்டிருக்கும் பதிவில், "நாம் பல வருடங்களாக டிரெஸிங் ரூம்மைப் பகிர்ந்து வந்திருக்கிறோம். ரஹானே சாதித்தற்குப் பின்னால் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்று எனக்கு தெரியும்.

அர்ப்பணிப்பும், தொழில்முறையும் உங்களைத் தனித்து காட்டி இருக்கின்றன. அற்புதமான கிரிக்கெட் வாழ்கைக்கு எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல விராட் கோலி வெளியிட்டிருக்கும் பதிவில், "உங்களின் சிறந்த கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள் நண்பா. இந்திய கிரிக்கெட்டிற்காக நீங்கள் பல அற்புதங்களைச் செய்துள்ளீர்கள்.

அஜின்கியா ரஹானே
அஜின்கியா ரஹானே

உங்கள் பயணத்தைக் குறித்து நீங்கள் மிகவும் பெருமைப்படலாம். டெஸ்ட் போட்டிகளில் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர் நீங்கள். உங்களுக்கு எப்போதும் என்னுடைய நல்வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று வாழ்த்தி இருக்கிறார்.

Rahane: '278... Signing Off' - வெளிநாட்டு மைதானங்களின் மிடில் ஆர்டர் காவலன் ரஹானே!

"Cap No.278... Signing Off" சமூக வலைத்தளத்தில் இந்த ஒற்றை வரியைப் பதிவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார். இந்தி... மேலும் பார்க்க

Ajinkya Rahane: "கேப் எண் 278 விடைபெறுகிறது!"- ஓய்வை அறிவித்த ரஹானே

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ரஹானே இ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.." - சச்சின் டெண்டுல்கர்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

Rohit Sharma: 'நான் ஓய்வுபெறுகிறேனா?' - ரோஹித் சர்மா அளித்த விளக்கம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியுடன் ரோஹித் ஓய்வு பெறுகிறாரா?- விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியானது.இந்தத் தகவல்கள் அதிர்ச... மேலும் பார்க்க

`இது சரித்திரத் தருணம்!' - லார்ட்ஸில் பேட்டிங், பவுலிங் என சகலத்திலும் மிரட்டிய ஹர்மன்பிரீத் படை!

லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றி படைத்திருக்கிறது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மக... மேலும் பார்க்க