செய்திகள் :

தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்

post image

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்த்தார்.

இந்தூரில் மிதிவண்டி டயர் மற்றும் டியூப் விற்பனை செய்யும் ஒரு சிறிய தொழிலை நடத்தி வந்த அவர், ஒரு சாதாரண வீட்டில் இருந்து கொண்டு தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தார்.

நான்கு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்கள் நாட்டின் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக வசிக்கின்றனர்.

ஆனால் கன்ஷ்யாம் தனது வாழ்நாளின் கடைசி நான்கு ஆண்டுகளை, குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் இன்றி போபாலில் உள்ள 'அப்னா கர்' எனும் முதியோர் இல்லத்தில் கழிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இறப்புச் சான்றிதழை மட்டும் அனுப்புங்கள்

கடந்த 4-ஆம் தேதி கன்ஷ்யாம் இறந்துபோனார். முதியோர் இல்லத்தினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, போபாலுக்கு வருமாறு அவர்களைத் தொடர்ந்து வற்புறுத்தினர். ஆனால், அவர்கள் வருவதற்குச் சாக்குப்போக்குகள் கூறினர்.

அவர்கள் எப்படியும் தந்தையைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் உடலை இரண்டு நாட்கள் அடக்கம் செய்யாமல் வைத்திருந்தனர். ஆனால் நான்கு பிள்ளைகளில் யாரும் வரவில்லை. நீண்ட இழுபறிக்குப் பிறகு, அவரது உடலைத் தகனம் செய்துவிட்டு, இறப்புச் சான்றிதழை மட்டும் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு முதியோர் இல்லத்தினரிடம் பிள்ளைகள் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து அப்னா கர் முதியோர் இல்லத்தை நடத்தும் மாதுரி மிஸ்ரா கூறுகையில், "அவரது மனைவி இறந்தபோது, ​​அவரது இளைய மகளுக்கு வயது இரண்டுதான். ஒரு காலத்தில் ஒரு தந்தையால் தனியாக மனைவி இல்லாமல் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளை வளர்க்க முடிந்தது. ஆனால் இன்றோ, நான்கு குழந்தைகள் சேர்ந்து ஒரு தந்தையைக் கூடக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. கன்ஷ்யாம் தனது சொத்துக்களை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை தனது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொடுத்துவிட்டார்.

'அவரை எனக்கு தெரியாது'

கன்ஷ்யாம் கொடுத்த போன் நம்பருக்கு நாங்கள் அழைத்தபோது, ​​'எனக்கு அவரைத் தெரியாது, நான் அவரை விட்டுவிட்டேன். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று போனில் பேசிய நபர் குறிப்பிட்டார். மேலும், தந்தையின் வீட்டில் கிடைத்த பணம் சகோதர சகோதரிகளுக்கு இடையே பிரித்து வழங்கப்பட்டுவிட்டதாகவும், இனி அவர்களுக்கும் தங்கள் தந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எங்களிடம் அந்த நபர் தெரிவித்தார்.

கன்ஷியாம் எங்களிடம் வந்தபோது, ​​​​அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மேலும் அவரால் பேச முடியவில்லை. அவர் ஒரு சிறிய டயர், டியூப் கடை மற்றும் ஒரு சிறிய வீடு இருப்பதாக எங்களிடம் கூறினார். அவரது உடலில் பாதி செயலிழந்துவிட்டது.

போபாலின் பேருந்து நிலையத்தில் கன்ஷியாமைச் சில இளம் சமூக சேவகர்கள் கண்டுபிடித்து அப்னா கர்க்கு அழைத்து வந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் கன்ஷ்யாமிற்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போதெல்லாம், நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் அவர்கள் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து அவரைப் பராமரித்து வந்தோம்" என்று அவர் கூறினார்.

`ஈரான் தாக்கலாம்' - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரா... மேலும் பார்க்க

`இந்தியாவிலேயே அதிக விலை' டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழிலதிபர் மானவ் சர்தானா

டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள குருகிராம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பங்களாக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ... மேலும் பார்க்க

குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி - அரித்து சேதப்படுத்திய கரையான்கள்

பொதுவாக பண்டைய காலத்தில் தங்கம் போன்ற உலோகங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் லோத்ரா மாவட்டத்தில், விவசாயி ஒருவர் தனது பணத்தை தன... மேலும் பார்க்க

`குழந்தை பெறுவதற்கு மட்டுமா பெண்கள்?' மறுமணம் தவிர்த்து சொந்தகாலில் நிற்க போராடும் இளம் கைம்பெண்கள்

மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேற்கு விதர்பாவில் 2001 மற்றும் 2024 க்கு இடையில் அகோலா, அமராவ... மேலும் பார்க்க

சேரும் முன்பே சேட்டை; "லேப்டாப்பைத் தரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை" - கடுப்பான CEO-வின் பதிவு வைரல்

ஜெய்ப்பூரில் உள்ள 'வன்ஷிவ் டெக்' நிறுவனத்தின் சி.இ.ஓ கவுரவ் கதேர்பால், சமீபத்தில் பகிர்ந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.அவரது நிறுவனத்தில் 15 LPA சம்பளத்தில் தேர்வான ஒரு பெண், 3 மாத நோட்டீஸ... மேலும் பார்க்க

மும்பையில் அமேசான், ஐ.ஐ.டி உணவு லைசென்ஸ் ரத்து: `கொசுவை வாளால் கொல்லாதீர்கள்' - ஐகோர்ட் விமர்சனம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் மும்பை உட்பட மக... மேலும் பார்க்க