செய்திகள் :

தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க புகார்

post image

தூத்துக்குடியில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில்  கடந்த 8-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகத்திலேயே வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க அரசுதான். முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் குறுவை சாகுபடி என்றால் என்ன தெரியுமா? டெல்டாவில் ஏற்பட்டிருக்கும் வறட்சி பற்றி தெரியுமா?

புகார் மனு அளித்த த.வெ.கவினர்
புகார் மனு அளித்த த.வெ.கவினர்

அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் அழிக்க நினைக்கிறான். சிரித்தால் கல்யாண வீடு, அழுதால் எழவு வீடு, தியேட்டரில் அழுதால் விஜய் செத்து போயிட்டான் என்று நினைப்பார்கள் அழாதீர்கள் என்றேன்” எனப் பேசினார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட த.வெ.க.,சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்தப் புகாரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஏற்கெனவே முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

சர்ச் நிர்வாகம் யாருக்கு? ஆர்த்தடாக்ஸ் - யாக்கோபாய பாதிரியார்கள் மோதல்; 22 பேர் மீது வழக்கு

கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினருக்கும், யாக்கோபாய பிரிவினருக்கும் இடையே சில சர்ச்களை நிர்வகிப்பது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருகிறது. சில சர்சுகள் சம்பந்தமாக கோர்ட்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஆற்காடு இளைஞனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15-12-2019 அன்று 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டார். இது சம்பந்தமாகப் பதியப்பட்ட போக்சோ வழக்கில் சிலம்ப... மேலும் பார்க்க

கும்பகோணம்: காரில் ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரம்; பாஜக நிர்வாகியைக் கைதுசெய்த போலீஸ்!

கும்பகோணம், சத்யம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வேதா என்கிற வேதச்செல்வம் (52). இவர் பாஜக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையி... மேலும் பார்க்க

'கொள்ளிடம் பாலத்தில் எல்லை மீறும் ஜோடிகள்; முகம் சுளிக்கும் மக்கள்!' - தகாத செயல்களை தடுக்க கோரிக்கை

திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 2016 -ம் ஆண்டு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த ஜெயலலித... மேலும் பார்க்க

மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; யாருக்கும் தெரியாமல் எரித்த வனத்துறையினர் - அதிர்ச்சி பின்னணி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச் சரகம், அத்தாணி பிரிவு, மாதையன் கோயில் காப்புக்காடு பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதன் உடல் முழுமையாக அழுகி ச... மேலும் பார்க்க

ஜாமீன் கிடைக்க ஐகோர்ட் நீதிபதிக்கு பில்லிசூனியம்; சுடுகாட்டில் நீதிபதி படத்திற்கு பூஜை; 4 பேர் கைது

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பில்லிசூனியத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அல்லது தனக்கு வேண்டப்படாத நபருக்கு பில்லிசூனியம் வைக... மேலும் பார்க்க