செய்திகள் :

தமிழ்த்தாய் வாழ்த்து: "இந்தப் போக்கு தொடரவேண்டும்!" - தவெக அரசை பாராட்டும் கமல்ஹாசன்

post image

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் ஆளும் பாஜக அரசு அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது. அதில், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாட வேண்டும். அதை தொடர்ந்து தேசிய கீதம் பாடல் பாட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு தொடர்புடைய அரசு நிகழ்வுகளிலும், ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளிலும் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்களிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சர்ச்சையானது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஏற்கெனவே திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை மாற்றும் வகையிலேயே மத்திய அரசின் புதிய அறிவிப்பு வந்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட்10) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தவெக அரசின் இந்த முன்னெடுப்பை அரசியல் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர். அதன் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"இடம் மாறியதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை" - ஓபிஎஸ் vs செங்கோட்டையன் காரசார விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.இந்நிலையில்... மேலும் பார்க்க

பெரியார் புலிகள் காப்பகத்தில் ட்ரோன்; தமிழகக் குழுவால் சர்ச்சை! - கேரள வனத்துறை எடுத்த முடிவு

விவசாயத் தேவைகளுக்காக முல்லைப் பெரியார் அணையின் மதகுகளைத் தமிழ்நாடு அரசு கடந்த 8-ம் தேதி திறந்தது. இதனையொட்டி, தமிழக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பஞ்சாப்: ஹர்பஜன் சிங் பகிர்ந்த `ஜோம்பி போதை இளைஞர்கள்' வீடியோ; ஆம் ஆத்மி அரசு பதிலடி!

பா.ஜ.க எம்.பி ஹர்பஜன் சிங் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த விடியோவில் டர்பன் அணிந்த சிலர் சாலையோரத்தில் நிலைகுலைந்து, நிற்க முடியாமல் தடுமாறுகின்றனர். அந்த வீடியோவைப் பகிர்... மேலும் பார்க்க

TN Assembly:``இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை!" - ஓ.பி.எஸ்ஸுக்கு செங்கோட்டையன் பதிலடி| Live

``இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை." - செங்கோட்டையன்``திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. மூன்றே மாதங்களில் சரித்திரம் படைக்க முடியாது." - ஓ.பி.எஸ்ஸூக்கு செங்க... மேலும் பார்க்க

``தமிழ் மீதான தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்" - அமைச்சர் மரிய வில்சனைச் சாடும் பாஜக

நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் மரிவில்சன், ''நான் பிறப்பால் கிருஸ்தவன். என் மதம் எனக்கு அன்பு, கருணை, இரக்கத்தின் மொழியைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இது தமிழ் படித்... மேலும் பார்க்க