செய்திகள் :

'40 ஆண்டுகளில் ரூ. 1.65 கோடி' - யாசகம் பெற்ற பணத்தை மக்களுக்கே தரும் முதியவர்; நெகிழ்ச்சிப் பின்னணி!

post image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சட்டை இல்லாமல் துண்டைப் போர்த்திக்கொண்டு நுழைந்த முதியவர் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள்.

தான் ஒரு யாசகர் என்றும் மக்களிடம் யாசகம் மூலம் பெறப்பட்ட தொகையை மக்களுக்கே வழங்கும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவரை அனுமதித்துள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளைச்‌ சந்தித்து 10 ஆயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறார்.

புல் பாண்டி
புல் பாண்டி

இது குறித்து தெரிவித்த அந்த முதியவர், "நான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த புல் பாண்டியன்.‌ 75 வயதாகிறது. திருமணமாகி இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனைவி சரஸ்வதி இறந்துவிட்டார்.

தனிமையில் இருந்த நான் கடந்த 40 வருடங்களுக்கு மேல் ஆக மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் யாசகம் பெற்று வருகிறேன். எனக்கு இவ்வளவு தொகை தேவையில்லை. சேவைக்காக எனது பணத்தை வழங்க எண்ணினேன் அதன்படி ஒவ்வொரு மாதமும் யாசகம் பெறும் பணத்தை அந்தந்த மாவட்டத்தில் வழங்கி வருகிறேன்.

இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் எனது யாசக பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்காக பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன். அது மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 470 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக யாசக பணத்தை அளித்தேன்.

தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பணத்தை வழங்கி வருகிறேன். கடந்த மாதம் கோவையில் யாசகம் பெற்ற பத்தாயிரம் ரூபாயை இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்க வந்துள்ளேன்.

கடந்த 40 வருடங்களாக ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். தொடர்ந்து யாசகம் பெற்று தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மக்களின் சேவைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவேன்" எனக் கூறியுள்ளார்.

75 வயதான முதியவர் ஒருவர் மக்களிடம் யாசகம் பெரும் பணத்தைச் சேமித்து மீண்டும் மக்களுக்கே வழங்கி வரும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``பாவப்பட வேண்டாம்; எங்களைச் சமமாக நடத்தினாலே போதும்..!" - சவாலை சாதனையாக்கும் விழிச்சவால் மாணவர்

நம் மனம் பெரும்பாலும் இருப்பவற்றை மறந்து விட்டு, இல்லாதவற்றை நினைத்து ஏங்கும். ஆடம்பரத்தை எதிர்பார்த்து வருந்தும் மனிதர்களுக்கு மத்தியில் அத்தியாவசியத்திற்கே போராடுபவர்களும் உண்டு. நம்மிடம் என்ன இருக்... மேலும் பார்க்க

Mirror Writing: கண்ணாடிக்குள் தெரியும் திறமை... நெல்லை மாணவியின் வியக்க வைக்கும் பயணம்!

1330 திருக்குறளையும் எழுதியிருக்கேன்"ன்னு ஒரு ஆறாம் வகுப்பு மாணவி சொன்னா, 'அட... சூப்பரே!'ன்னுதான் தோணும்.ஆனா, "அதை எல்லாமே மிரர் ரைட்டிங்ல எழுதியிருக்கேன்"ன்னு சொன்ன உடனே ஆச்சர்யம் இன்னும் கொஞ்சம் அத... மேலும் பார்க்க

`சங்கிலியில கட்டிப்போட்டு வச்சிருந்தாங்க' தாயின் 23 வருட தவிப்பு; பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த மகன்

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி, பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த தனது மகனை அவரது தாய் மீட்டு வந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், கோவையில் அரங்கேறியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த சுந்தரி மற்றும் அவரது கணவர் ... மேலும் பார்க்க

“முடி இல்லைன்னா என்ன? மூளை இருக்கே! முடியும்னு நினைச்சாலே...”- இவர்கள் SURVIVOR-கள் அல்ல WINNER-கள்

சென்னை, அடையாறு புற்றுநோய் மையத்தில் வருடா வருடம் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்தவர்களை ஒன்றுதிரட்டி “Survivor’s reunion” என்ற பெயரில் ஓர் அழகான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2... மேலும் பார்க்க

`உழைச்சா தான் வாழுறதுக்கு பெருமை சாமி' - 76 வயதில் அதிரசம் சுட்டு விற்கும் செல்லாயி பாட்டி!

அதிரசம் சுட்டு வாழ்க்கையை இனிமையாக்கிய செல்லாயி பாட்டியின் கதை!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பச்சளூர் கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான செல்லாயி பாட்டி, இன்றும் தனது உழைப்பால் பலருக்கும் முன... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு இலவச சிகிச்சை... சேவையால் மனங்களை வென்ற அம்பாசமுத்திரம் மருத்துவர்!

இன்றைய காலத்தில் மருத்துவம் என்பது பலருக்கு ஒரு தொழிலாக இருக்கலாம். ஆனால் சிலர் மட்டும் அதை ஒரு சேவையாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த இளம் மருத்துவர் டாக்... மேலும் பார்க்க