செய்திகள் :

மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; யாருக்கும் தெரியாமல் எரித்த வனத்துறையினர் - அதிர்ச்சி பின்னணி

post image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச் சரகம், அத்தாணி பிரிவு, மாதையன் கோயில் காப்புக்காடு பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதன் உடல் முழுமையாக அழுகி சிதைந்த நிலையில் இருந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் இறந்தால், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு‌ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்த பின்னரே சிறுத்தை போன்ற விலங்குகளின் உடலை முறைப்படி எரிக்க வேண்டும்.

ஆனால், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனக் காப்பாளர் மைதிலி மற்றும் வனக் காவலர் பிரவீன் ஆகிய இருவரும் சிறுத்தை இறப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

Rep image AI

மேலும், அழுகிய நிலையில் இருந்த சிறுத்தையின் நகங்கள், பற்கள் உள்ளிட்ட முக்கிய உடல் பாகங்களை எடுத்துச் சென்று தனியாக எரித்து அப்புறப்படுத்தியதாவும் கூறப்படுகிறது. இந்த விதிமீறல் குறித்து ரகசியத் தகவல்களைப் பெற்ற புதிய வனச்சரக அலுவலர் நந்தினி, அந்த இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்து குற்றத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தகவலை மறைத்து சிறுத்தையின் உடல் பாகங்களைச் சட்டவிரோதமாக அப்புறப்படுத்திய குற்றத்திற்காக மைதிலி மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் மாவட்ட வன அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்களை இவர்கள் கைப்பற்றி பதுக்கியுள்ளார்களா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'கொள்ளிடம் பாலத்தில் எல்லை மீறும் ஜோடிகள்; முகம் சுளிக்கும் மக்கள்!' - தகாத செயல்களை தடுக்க கோரிக்கை

திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 2016 -ம் ஆண்டு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த ஜெயலலித... மேலும் பார்க்க

ஜாமீன் கிடைக்க ஐகோர்ட் நீதிபதிக்கு பில்லிசூனியம்; சுடுகாட்டில் நீதிபதி படத்திற்கு பூஜை; 4 பேர் கைது

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பில்லிசூனியத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அல்லது தனக்கு வேண்டப்படாத நபருக்கு பில்லிசூனியம் வைக... மேலும் பார்க்க

பரமக்குடி: சவடு மண் வியாபாரியிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம்; வருவாய் கோட்டாட்சியர் சிக்கியது எப்படி?

பரமக்குடி அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பரமக்குடி பகுதியில் சவடு மண் விற்பனை செய்து வருகிறார். இதற்கான அனுமதியினை மாதம் தோறும் பரமக்குடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் பெற வேண்டு... மேலும் பார்க்க

கடந்தமுறை உங்களிடம் ரூ.50 லட்சம் திருடினோம், மீண்டும் வருவோம்: வழக்கறிஞரிடம் ரூ.3.15 கோடி கொள்ளை

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவை சேர்ந்தவர் பல்வந்த் சிங் வாலியா. மூத்த வழக்கறிஞரான பல்வந்த் சிங் இரவு 9 மணிக்கு தனது நாயை நடைபயிற்சிக்கு வெளியில் அழைத்து சென்றார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார்.... மேலும் பார்க்க

கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி - கோவை அதிர்ச்சி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் இருவரும் சி... மேலும் பார்க்க

தூத்துக்குடி டு இலங்கை; கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்!

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள், சங்குகள், மஞ்சள், கடல் அட்டைகள், வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், போதையேற்றும் பொடிகள், கஞ்சா ஆகியவை கடத்தப்படுவ... மேலும் பார்க்க