செய்திகள் :

Gaza: `அதிபர் ட்ரம்ப்பின் 15 அம்ச ஆவணம்' - நெதன்யாகு நிராகரிப்பும் அமெரிக்கா பதிலும்!

post image

காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில் காசாவில் 73,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஐநா தகவல்படி, காசாவின் சுமார் 19 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

காசா
காசா

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை முழுமையாக நிறுத்திவிட்டு படைகளைத் திரும்பப் பெற்றால், எங்கள் கனரக ஆயுதங்களை ஒப்படைப்போம் என்று ஹமாஸ் நிபந்தனையுடன் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே, இருதரப்பும் டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டமான 15 அம்சக் ஆவணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்." என அமெரிக்காவின் 'சமாதான வாரியம்' (Board of Peace) அறிவித்திருந்தது.

இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், தனது வலதுசாரி கூட்டணிக் கட்சிகளின் கடுமையான அழுத்தத்தில் நெதன்யாகு உள்ளார். தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் உள்ளிட்ட தீவிர வலதுசாரி தலைவர்கள் இந்தத் திட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ``அமெரிக்கா முன்வைத்திருக்கும் 15 அம்ச ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது. ஹமாஸ் முற்றிலும் முடக்கப்படும் வரை ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படாது. எங்கள் நாட்டு மக்களுக்கான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடரும். போலித்தனமான ஆயுதக் களைவை ஏற்க முடியாது. படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்." என்றார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அதேவேளையில், பிபிசியிடம் பேசிய ஹமாஸ் நிர்வாகி ஒருவர், ``இந்த ஒப்பந்தத்திற்குத் தங்களுடைய ஆதரவு தொடர்கிறது. 15 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம். ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகளின்படி அனைத்துத் தரப்பினரும் நடப்பதை சர்வதேச மத்தியஸ்தர்கள் உறுதி செய்ய வேண்டும்." என்றார்.

அதேசமயம், டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட மூத்த தூதர் நிகோலே மிளடேனோவ், ``இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது. ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவதை உறுதி செய்த பிறகே இஸ்ரேலியப் படைகள் விலகக் கோரப்படும்." என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி கொடுத்த பாஜக அமைச்சர்; கடுப்பான அமித் ஷா! - நடந்தது என்ன ?

இந்தியக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது, புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் மிக உயரியதான அந்த விருதை கொடுப்பதற்காக, ஆகஸ்ட் 8, 9 என இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார் ... மேலும் பார்க்க

`அந்த தாக்குதலில் நான் உயிரிழந்திருப்பேன்' - கல், ஷூ, சகதியால் மம்தா பானர்ஜி கார் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அங்கு பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் அதிரு... மேலும் பார்க்க

FCRA 2026: ``சமூக அமைப்புகளின் சொத்துக்களை அபகரிக்கும் சர்வாதிகார ஆக்கிரமிப்பு" - மாணிக்கம் தாக்கூர்

இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் (NGO), அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் 2010-ம் ஆண்டு 'வெளிநாட்டு நன்கொ... மேலும் பார்க்க

``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்!" - முதல்வர் விஜய் அறிவிப்பு | Live

``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்." - முதல்வர் விஜய்``விவசாயிகள் நெல் மற்றும் கரும்பை விளைவிக்கவும் விற்பனை செய்யவும் உடல் பொருள் ஆவி அத்தனையையும் கொடுக்கின்றனர். ... மேலும் பார்க்க

தவெக: ``முந்தைய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறதா?" - அமைச்சர் அருண் ராஜ் பதில்

சென்னையில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமான பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன. ம... மேலும் பார்க்க