செய்திகள் :

"அந்தப் படம் வந்தப்ப என்ன படிச்சுட்டிருந்தீங்க?"- சூர்யாவின் கேள்விக்கு மமிதா பதில்; கலாய்த்த ராதிகா

post image

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மமிதா பைஜூ
மமிதா பைஜூ

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, வெங்கி அத்லூரி ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அப்போது மமிதா பைஜூவிடம், 'சூர்யாவின் எந்தப் படத்தை நீங்கள் முதன் முதலாகப் பார்த்தீர்கள்?' என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, "சூர்யா சாரின் 'சில்லுனு ஒரு காதல்' படத்தைத்தான் நான் முதன்முதலாகப் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும், என் அண்ணாவும் நிறைய முறை அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறோம்" என்றிருக்கிறார்.

'விஸ்வநாத் & சன்ஸ்' டீம்
'விஸ்வநாத் & சன்ஸ்' டீம்

'அப்போது நீங்கள் என்ன படித்துக்கொண்டிருந்தீர்கள்?' என்று சூர்யா கேட்க, 'நான் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்' என்று மமிதா கூற, 'கேட்காமலேயே இருந்திருக்கலாம்' என்று சொல்லி ராதிகா சிரித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

"அந்தச் சமயத்திலிருந்து அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்" - சூர்யா கூறிவது என்ன?

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

இம்சை அரசன் 23-ம் புலிகேசி : அரியணையில் ஒரு கோமாளி! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 14

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 14அரியணையில் ஒரு கோமாளி!சோழபுர மன்னன் 23-ம் புலிகேசியைப் பிடித்த... மேலும் பார்க்க

Brothers & Sisters: "என் மனைவியே இந்த சீரிஸ் பார்க்கமாட்டேங்குறாங்க!" - போஸ் வெங்கட் பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன. போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும... மேலும் பார்க்க

"அவரது கதாபாத்திரங்கள் சினிமாவிற்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு..!"- மமிதா குறித்து சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க

Brothers & Sisters: "அதனுடைய அருமை இப்போ புரியலைனாலும்..." - ஃபேமிலியுடன் நடிப்பது பற்றி ராஜ் ஐயப்பா

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன. போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும... மேலும் பார்க்க

Karuppu: "அதுக்கு பட்ஜெட் இல்லப்பா!" - 'சிங்கம்' போலீஸ் காட்சி குறித்து ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆர்.ஜே. பாலாஜியின் பச்ச சட்ட பாட்காஸ்டிற்குத் தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஸ்பாட்டிஃபை நடத்திய 'பச்ச சட்ட -... மேலும் பார்க்க