செய்திகள் :

Karnataka SIR: "வாக்குரிமை நீக்கப்பட்ட வாக்காளர்களில் நானும் ஒருவன்" - வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்

post image

கர்நாடகாவில் தற்போது சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை நடந்து வருகிறது.

இந்த நடவடிக்கையில் பெங்களூரு தொகுதியில் தனது வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வீடியோவில் பேசியிருக்கும் அவர், "அன்பான நண்பர்களே, உங்களிடம் ஒரு ஜோக் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

SIR (சிறப்புத் தீவிர திருத்தம்) நடவடிக்கைக்குப் பிறகு பெங்களூரு தொகுதியில் வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நல்ல ஜோக், இது..

நான் இந்தத் தொகுதியில்தான் பிறந்தேன். இந்தத் தொகுதியில்தான் வாழ்ந்தேன். எனது பள்ளிப்படிப்பு, கல்லூரி, நாடகம் எல்லாமே இங்குதான். உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன், நான் இந்தத் தொகுதியின் எம்பி வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறேன்.

ஆட்டம் ஆரம்பம்... எனது வாக்காளர் அடையாள அட்டையை மீண்டும் பெற நான் என்னென்ன நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்று பார்க்கிறேன். ஆனால் எனது நண்பரே (பிரதமர்) உங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று நினைக்கும் சில குடிமக்களின் வாக்கு உரிமையை மறுக்க உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

டெல்லி போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்
டெல்லி போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்

ஆனால் உங்களை அரியணையலிருந்து கீழே இறக்கும் எங்கள் சக்தியை உங்களால் தடுக்க முடியுமா?" என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நீட் முறைகேடு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

நடிகர் சியான் விக்ரம், 'லார் கிப்பான்' என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குடன் விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ... மேலும் பார்க்க

"அந்தச் சமயத்திலிருந்து அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்" - சூர்யா கூறிவது என்ன?

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

"அந்தப் படம் வந்தப்ப என்ன படிச்சுட்டிருந்தீங்க?"- சூர்யாவின் கேள்விக்கு மமிதா பதில்; கலாய்த்த ராதிகா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

இம்சை அரசன் 23-ம் புலிகேசி : அரியணையில் ஒரு கோமாளி! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 14

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 14அரியணையில் ஒரு கோமாளி!சோழபுர மன்னன் 23-ம் புலிகேசியைப் பிடித்த... மேலும் பார்க்க

Brothers & Sisters: "என் மனைவியே இந்த சீரிஸ் பார்க்கமாட்டேங்குறாங்க!" - போஸ் வெங்கட் பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன. போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும... மேலும் பார்க்க

"அவரது கதாபாத்திரங்கள் சினிமாவிற்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு..!"- மமிதா குறித்து சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க