செய்திகள் :

வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சம்; மொத்தமாக ராணுவத்துக்கு உயில் எழுதி நெகிழும் மதுரை முதியவர்!

post image

மதுரை ஹார்விபட்டி பகுதியை சேர்ந்தவர், சுப்பையா. 82 வயதான இவர், மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தனியாக வாடகை வீட்டில் வசித்துவருகிறார்

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த கிருஷ்ணாவிடம் தனது வங்கிக் கணக்கில் உள்ள 30 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை மற்றும் தனது பெயரில் வங்கி லாக்கரில் உள்ள 30 லட்சம் மதிப்பிலான தங்க பொருள்கள் ஆகியவற்றிற்கான உயில் ஆவணத்தை இந்திய ராணுவ வீரர்களுக்காக கொடிநாள் நிதியாக ஒப்படைத்தார்.

மேலும் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.  இவர் தன்னுடைய உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமில் முதியவர் சுப்பையா கொடிநாள் நிதியாக 60 லட்சம் ரூபாய் உயில் ஆவணத்தை வழங்கியதைப் பாராட்டும் வகையில், அங்கிருந்த அனைத்து அரசு அதிகாரிகளும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

சுப்பையா

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் சுப்பையா, “எனக்கு பிள்ளைகள், மனைவி என யாருமில்லை; நமது நாட்டைக் காப்பாற்றுவது ராணுவம்தான். அவர்களுக்கு எவ்வளவு செய்தாலும், அது நமக்கு மனது திருப்தியைத் தரும். 60 லட்சம் மதிப்பிலான டெபாசிட் தொகை, லாக்கர் ஆகியவற்றை பணமாக எடுத்து ராணுவ வீரர்களுக்காக வழங்க முயன்றேன். ஆனால் வங்கிகளில் அதனை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக உயில் ஆவணமாக வழங்கியுள்ளேன்.

மேலும் பத்தாயிரம் காசோலை கொடுத்துள்ளேன். சேமிப்பில் இருந்து மாத மாதம் வரும் வட்டிப் பணத்தையும் கொடுக்கவுள்ளேன், அதுதான் என்னுடைய நோக்கம்.

ராணுவ வீரர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இது ஆத்ம திருப்தியாக உள்ளது. நான் இருந்தாலும் இறந்தாலும் திருப்தியாக உள்ளேன்... ஆத்ம திருப்திக்காக கொடுத்துள்ளேன்.

சுப்பையா

நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களுடைய மொத்த சேமிப்பிலிருந்து கடைசி காலத்தில் 1%  ராணுவத்திற்காக வழங்க வேண்டும் என்பதை சட்டமாக இயற்ற வேண்டும். ராணுவ வீரர்கள்  நமக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். 2013 ஆம் ஆண்டு என்னுடைய உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்துவிட்டேன்” என்றார்.

Kanimozhi: "காவிரிப் பிரச்னையைத் திசைதிருப்பத் த.வெ.க அரசு நடத்தும் நாடகம்தான் இது!" - கனிமொழி

தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேச அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது தவெக அரசு. ஆனால், இதில் திமுக எம்.பி-க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

தவெக வைத்த பொறியில் சிக்கியதா திமுக? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவை நெருங்கும் திமுக!

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் விஜய் ஏற்பாடு செய்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இத... மேலும் பார்க்க

ராஞ்சி தேர்வு முறைகேடு: ``கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" - மாணவர்கள் அமைப்பு உறுதி

டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளு... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமானப் பணிகள் தீவிரம் - 8 மாதங்களில் முடிக்க திட்டம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற... மேலும் பார்க்க

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன... மேலும் பார்க்க

"முதல்வர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்!" - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாரம்பர்ய காங்கேயம் நாட்டு மாடுகள் அழகுப் போட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உள... மேலும் பார்க்க