செய்திகள் :

"முதல்வர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்!" - செங்கோட்டையன்

post image

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாரம்பர்ய காங்கேயம் நாட்டு மாடுகள் அழகுப் போட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " தமிழகத்தில் நல்லதொருா ஆட்சி மலர்ந்திருக்கிறது. வரவிருக்கும் காலங்கள் பொற்காலமாக அமையும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெல்டா விவசாயிகளை வாழ வைக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட அங்கே வைக்க தமிழக அரசு அனுமதிக்காது.

அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தின் உரிமைகள் என்றும் நிலைநாட்டப்படும். வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களும் நிலை நாட்டப்படும். முதலமைச்சர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும், என்பதால்தான் அவர் அமைதியாக இருக்கிறார். மற்றபடி வேறு எதுவும் இல்லை. காவிரி நீர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தான் செயல்பட்டு வருகிறோம். அதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது" என்றார்.

All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" - டி.கே. சிவக்குமார்

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கர்நா... மேலும் பார்க்க

கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா!

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் தற்போது திறந்துவிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக... மேலும் பார்க்க

"தீண்டாமைச் சுவரை உடனே அகற்றுங்கள்" - அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து கெஞ்சிய நபர்; என்ன நடந்தது?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 22-வது ஆண்டு புத்தக கண்காட்சி ... மேலும் பார்க்க

`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' - கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பள்ளி அருகில் வடாபாவ், சமோசா விற்க தடை; பிறந்தநாளில் சாக்லேட் வழங்கவும் கட்டுப்பாடு

மகாராஷ்டிராவில் புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில்... மேலும் பார்க்க

தமிழக அரசின் உத்தரவை மீறி கர்நாடகாவுக்கு கனிமங்கள் கடத்தல்; வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது கேரளா, கர்நாடக அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமம் கடத்திய வாகனங்கள் பறிமுதல... மேலும் பார்க்க