செய்திகள் :

"இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறேன்"- சீமான் ஆவேசம்

post image

நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட். 2) சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலைக் கூட்டம், நடிகனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டார்கள்.

சீமான்
சீமான்

பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம் என்கிறார்கள். சீமான் பென்ஸ் கார் வாங்கிவிட்டார் என்று சொல்கிறார்கள். என்னுடைய மாமா ஒருத்தர் கார் வாங்கி கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார்.

திரள்நிதி திருடர்கள் என்கிறார்கள், திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்தமாட்டோம். திமுக செய்த வெறும் விளம்பர அரசைத்தான், இவர்களும் செய்கிறார்கள்.

மக்கள் காசை வீணடிக்க மாட்டோம் என்றவர்கள் பேருந்து நிலையங்களில் விளம்பர பதாகை வைத்துள்ளார்கள். இவ்வளவு கோடிகளை செலவழித்து எதற்கு தெருத்தெருவாய் விளம்பரம். விளம்பர அரசுதான்..ஒன்லி ரீல்ஸ் தான்.

சீமான்
சீமான்

ஆட்டம் மாறி மாறி வரும். இந்த ஆட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் கால்களுக்கு வந்த பந்து எங்கள் கால்களுக்கும் ஒருநாள் வரும். பார்த்து பேச வேண்டும். இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்று காத்து இருக்கிறேன். வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

'இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பொது சிவில் சட்டம் அவசியம்'- எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேசியிருக்கிறார்.1993-ஆம் ஆண்டில் மத அடிப்படையில் கொடுமைகளை அனுபவித்த ஒரு ஹிந்து குடும்பத்தில் வாழ்க்கையை மை... மேலும் பார்க்க

'நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்'- உதயநிதி

காவிரி நீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை மகாராஷ்டிர மா... மேலும் பார்க்க

60,000 பேர் எல்லை தாண்டல், பல உயிரிழப்புகள்... சியூட்டாவில் இப்போது என்ன நிலை?

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் சுமார் 60,000 பேர் நுழைந்த சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல உயிரிழப்புகளுக்கும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிக்கும் க... மேலும் பார்க்க

கயிறு இழுக்கும் போட்டியில் நிலைத்தடுமாறி விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்; சுதாரித்த காவலர்கள்!

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள் இன்று நடைபெற்றன. அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்கிற முறையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமை... மேலும் பார்க்க

நீட் போராட்டம், காவிரி: "அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" - தயாநிதி மாறன் மறைமுக சாடல்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட கால திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. அதன் பின், தவெக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இதன் பிறகு, திமுகவும், காங்கிரஸ் மாறி ம... மேலும் பார்க்க