செய்திகள் :

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கருத்தரிக்காது என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அதுவே கருத்தடையாக இருக்கும் என்கிறார்களே... அது உண்மையா... தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் எத்தனை மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருக்கும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.  

டாக்டர் கார்த்திகா

கருத்தரிப்பது தொடர்பான  மூட நம்பிக்கைகளில், இதையும் ஒன்றாகவே பார்க்க வேண்டும். பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும்போது, 6 மாதங்கள் வரை பீரியட்ஸ் வராது. குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறீர்கள், பீரியட்ஸும் வரவில்லை என்ற நிலையில் நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகள் மிகக் குறைவு. 

ஆனால்,  பெரும்பாலான பெண்களுக்கு பீரியட்ஸ் வர ஆரம்பித்துவிடும். பீரியட்ஸ் வரத் தொடங்கிவிட்டாலே கருமுட்டை வெடித்து வெளியே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த நிலையில் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, நீங்கள் கருத்தரிக்க வேண்டாம் என நினைத்தால், தாய்ப்பால் கொடுக்கும் நிலையிலும் அவசியம் கருத்தடை முறையைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

எப்போதுமே ஒரு கர்ப்பத்துக்கும் அடுத்த கர்ப்பத்துக்கும் இடையில் குறைந்தது ஒன்றரை வருடம் அதாவது 18 மாதங்கள் இடைவெளியாவது விட வேண்டியது அவசியம்.

எப்போதுமே ஒரு கர்ப்பத்துக்கும் அடுத்த கர்ப்பத்துக்கும் இடையில் குறைந்தது ஒன்றரை வருடம் அதாவது 18 மாதங்கள்  இடைவெளியாவது விட வேண்டியது அவசியம். அதனால் ஏதேனும் ஒரு கருத்தடை முறையைப் பின்பற்ற வேண்டும். அது ஆணுறையாகவோ, கர்ப்பப்பையினுள் பொருத்திக்கொள்ளும் காப்பர்டி போன்ற கருவியாகவோ, வாய்வழி உட்கொள்ளும் ஹார்மோன் மாத்திரையாகவோ இருக்கலாம். அதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதில் எந்த பாதிப்பும் வராது. இது குறித்து மேலும் தகவல்கள் பெற உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: திடீரென கேட்காமல் போன காது... மீண்டும் கேட்குமா, நிரந்தர பிரச்னையாகுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில வாரங்களாக காது கேட்பதில் சிரமங்களை உணர்கிறேன். இது தற்காலிகமான பிரச்னையாக இருக்குமா... மீண்டும் காது கேட்குமா அல்லது நிரந்தரமான பிரச்னையாக மாறிவிடுமா... எ... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் மில்க் ஷேக்... ஆரோக்கியமான காலை உணவுக்கு மாற்றாகுமா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே காலை உணவுக்கு வழக்கமான இட்லி, தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடுவதில்லை. தினமும் மில்க் ஷேக் மட்டுமே கேட்கிறார்கள். இப்படி தினமும் மில்க் ஷேக் கொடுப்பது ஆ... மேலும் பார்க்க

Doctor Vikatan: 70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி... நரம்பு இழுக்கும் பிரச்னை... என்ன தீர்வு?

Doctor Vikatan:எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரைநரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டுவலிக்கிறது. ... மேலும் பார்க்க

Doctor Vikatan: யாரிடமும் எதற்கும் கோபமே படாத நண்பன் - நல்ல குணமா... மனநல சிகிச்சை தேவையா?!

Doctor Vikatan: என் நண்பனுக்கு 40 வயதாகிறது. அவனுக்கு எப்போதும், எந்த விஷயத்துக்கும் கோபமே வருவதில்லை. யாராவது அவனை அவமானப்படுத்தினாலோ, காயப்படுத்தினாலோகூட கோபப்பட மாட்டான். நியாயமான விஷயங்களுக்குக்கூ... மேலும் பார்க்க

7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!

கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

`'Energy Drink' என்ற பெயரை நீக்க வேண்டும்' - ரெட் புல், ஸ்டிங் நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு!

'எனர்ஜி ட்ரிங்க்' (Energy Drink) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் பானங்களின் பிராண்டிங்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI), பெப்சிகோ,... மேலும் பார்க்க