செய்திகள் :

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் மில்க் ஷேக்... ஆரோக்கியமான காலை உணவுக்கு மாற்றாகுமா?

post image

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே காலை உணவுக்கு வழக்கமான இட்லி, தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடுவதில்லை. தினமும் மில்க் ஷேக் மட்டுமே கேட்கிறார்கள். இப்படி தினமும் மில்க் ஷேக் கொடுப்பது ஆரோக்கியமானதா... அது சத்தான உணவாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

``உணவுக்கு மாற்றாக நீங்கள் மில்க் ஷேக் கொடுக்கிறீர்கள் என்றால், அதை அதிகபட்ச ஊட்டச்சத்து நிறைந்ததாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டியது முக்கியம். உதாரணத்துக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்களில் செய்யப்படும் மில்க் ஷேக், காய்கறிகள் மற்றும் பாலக் கீரையில் செய்யப்படுகிற ஸ்மூத்தி போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொடுப்பதோடு, நார்ச்சத்துக்கும் உதவும்.

உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் வழிகாட்டுதலோடு, அவர்கள் பரிந்துரைக்கும் நியூட்ரிஷனல் சப்ளிமென்ட் சேர்த்தும் மில்க் ஷேக்  செய்து கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான புரதச்சத்து  அதிகரிக்கும். குழந்தைகள் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வோடும் இருப்பார்கள். பாலை காய்ச்சாமல் பயன்படுத்தாமல், காய்ச்சி ஆற வைத்து அதையே மில்க் ஷேக் செய்யப் பயன்படுத்த வேண்டும். சரிவிகித உணவு  கொடுக்க  முடியாத நிலையில், புரதச்சத்தும், ஆற்றலும் நிறைந்த மில்க் ஷேக்  நிச்சயம் குழந்தைகளுக்கு உதவும்.  

குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதற்காக செயற்கை மணமூட்டி, நிறமூட்டி, சுவையூட்டிகள், இனிப்புகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டாம். 

ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம்.

குழந்தைகளுக்குப் பிடித்த உணவு என்பதால், உணவுக்கு மாற்றாக அதையே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். எல்லாவகையான உணவுகளையும் உண்பதற்கு அவர்களைப் பழக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகளே கொடுக்காமல் இருக்க முடியாது. அதனால் அவற்றை அளவில் குறைத்துக் கொடுக்கலாம். ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம். "

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: 70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி... நரம்பு இழுக்கும் பிரச்னை... என்ன தீர்வு?

Doctor Vikatan:எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரைநரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டுவலிக்கிறது. ... மேலும் பார்க்க

Doctor Vikatan: யாரிடமும் எதற்கும் கோபமே படாத நண்பன் - நல்ல குணமா... மனநல சிகிச்சை தேவையா?!

Doctor Vikatan: என் நண்பனுக்கு 40 வயதாகிறது. அவனுக்கு எப்போதும், எந்த விஷயத்துக்கும் கோபமே வருவதில்லை. யாராவது அவனை அவமானப்படுத்தினாலோ, காயப்படுத்தினாலோகூட கோபப்பட மாட்டான். நியாயமான விஷயங்களுக்குக்கூ... மேலும் பார்க்க

7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!

கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

`'Energy Drink' என்ற பெயரை நீக்க வேண்டும்' - ரெட் புல், ஸ்டிங் நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு!

'எனர்ஜி ட்ரிங்க்' (Energy Drink) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் பானங்களின் பிராண்டிங்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI), பெப்சிகோ,... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி வரும் வாய்ப்புண்... புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan:எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. சூடான உணவுகளைச் சாப்பிடவே முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்... வாய்ப்புண், புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டா?பதில் சொல்கிறார்இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்கத்தில் பற்களைக் கடிப்பது மனநல பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என்15 வயது மகளுக்கு தூக்கத்தில் பற்களை நறநறவெனக் கடிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்படிப் பற்களைக் கடிப்பதற்கு மன அழுத்தம் காரணமாக இருக்குமா... இது மனநல பாதிப்பின் அறிகுறியா?பதில் சொல்கி... மேலும் பார்க்க