செய்திகள் :

Yash: ``எனக்கு பேய் படம்னா பயம், பார்க்கமாட்டேன்" - திரையில் மிரட்டும் ராக்கி பாய் கலகல டாக்!

post image

KGF திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நிதீஷ் திவாரி, மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான ' ராமாயணம் ' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் யஷ், லங்கேஷ்வரனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில், ராவணனாக யஷின் கம்பீரமான தோற்றமும், கம்பீரமான குரலும் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியது. இப்படத்தின் முதல் பாகம், தீபாவளியன்று நவம்பர் 8 அன்று உலகெங்கும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனுடன், கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்ஸிக்' என்ற தீவிரமான டார்க் ஆக்ஷன் திரில்லர் படத்திலும் யஷ் நடித்திருக்கிறார்.

நடிகர் யாஷ் - ராமாயணா
நடிகர் யாஷ் - ராமாயணா

இந்த நிலையில், நடிகர் யாஷ் சமீபத்தில் வெரைட்டி இந்தியாவுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் தன்னைப்பற்றி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில், ``நான் பேய் படங்கள் அல்லது திகில் சார்ந்த படங்களைப் பார்க்கமாட்டேன். எனக்கு பயப்படுவது சுத்தமாகப் பிடிக்காது. பயப்படுவதற்காக நாம் ஏன் தியேட்டருக்குப் போய் பணம் செலவழிக்க வேண்டும்? திகில் படங்களைப் பார்ப்பது தேவையில்லாமல் நமது இதயத் துடிப்பை அதிகரிக்கும்.

அதனால்தான் நான் அந்த வகைப் படங்களிலிருந்து விலகி இருக்கிறேன். ஒரு திரைப்படம் என்பது நம்மை முழு மனதுடன் ரசித்து, உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர, பயத்தில் நடுங்க வைப்பதாக இருக்கக்கூடாது" என்று யஷ் சிரித்துக்கொண்டே கூறினார்.

மலைகளையே நொறுக்கும் அளவுக்கு வலிமையான உடல்மொழியுடன் திரையில் தோன்றும் ராக்கிங் ஸ்டார், நிஜ வாழ்க்கையில் தனக்கு திகில் படங்களைக் கண்டு பயம் என்று கூறுயதை `என்னது ராக்கி பாய்க்கு, திகில் படம்னா பயமா!' என ரசிகர்கள் விளையாட்டாக கிண்டல் செய்து வருகின்றனர்.

Allu Arjun: "பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" - சர்ச்சையான அல்லு அர்ஜுன் ஸ்பீச்

ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், இணையத்தில் நடக்கும் ரசிகர்கள் சண்டை மற்றும் ட்ரோல்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எனது ரசிகர்கள் மற்றும் எ... மேலும் பார்க்க

கோவையில் நடிகர் ராம் சரணுக்கு நடந்த அறுவை சிகிச்சை; டிஸ்சார்ஜ் எப்போது?

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த, 'பெத்தி' என்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில... மேலும் பார்க்க

"'பகவந்த் கேசரி' பார்த்துட்டு விஜய் சார் என்கிட்ட பேசிய விஷயம்..." - 'பகவந்த் கேசரி' இயக்குநர்!

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

'ஆங்கிலம் தெரியாமல் இருந்தபோது என்னை கேலி செய்தனர்; ஆனால்..!'- கசப்பான சம்பவத்தை பகிர்ந்த பாக்யஸ்ரீ

நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் 'காந்தா' படத்தின் மூலம் அனைவர... மேலும் பார்க்க

Allu Arjun: 'மீண்டும் டைரக்ஷன்'- அல்லு அர்ஜூன் படத்தை இயக்குகிறாரா பேசில் ஜோசப்?

நடிகர் பேசில் ஜோசப் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான வேலையில் பரபரப்பாக இருந்துவருகிறார். கடந்த மே மாதம் இவர் நடித்திருந்த 'அதிரடி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ... மேலும் பார்க்க

Bhagyasri : "அன்று என் அப்பா வேலைக்காக கெஞ்சியதை பார்த்திருக்கிறேன்!" - உருகும் பாக்யஸ்ரீ போர்ஸ்

டோலிவுட் நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் புரோமோஷனில் பாக்யஸ்ரீ ... மேலும் பார்க்க