செய்திகள் :

மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்பட்ட மனைவி, மகள்கள்

post image

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தின் லோனி என்ற இடத்திற்கு அவினாஷ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

பலத்த மழையைத் தொடர்ந்து, தர்வா பகுதியில் உள்ள குப்தி ஆற்றில் மழை வெள்ளம் அதன் மீது கட்டப்பட்டு இருந்த மேம்பாலத்திற்கும் மேலே சென்று கொண்டிருந்தது. நீரின் ஆழத்தையும் நீரோட்டத்தின் வேகத்தையும் சரியாகக் கணிக்கத் தவறிய அவினாஷ் ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றபோது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

வாகனம் அடித்துச் செல்லப்பட்டபோது, ​​அவினாஷ் ஒரு மரத்தைப் பற்றிக்கொண்டு தப்பிப்பிழைத்தார். இருப்பினும், வாகனத்திற்குள் இருந்த அவரது மனைவி மாதவி மற்றும் இரண்டு சிறு மகள்களும் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தார்.

புனே குடியிருப்பு பகுதி

விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இரவு முழுவதும் தேட ஆரம்பித்தனர். இறுதியில் அண்டை மாவட்டமான யவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தவிர மகாராஷ்டிரா முழுவதும் பெய்த கனமழையால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இது தவிர 10 பேர் காயம் அடைந்தனர். மேலும் மழையால் மாநில அரசுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட பஸ்கள் பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புனேயில் குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இன்று மகாராஷ்டிரா முழுக்க கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் ... மேலும் பார்க்க

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைத்தவர்கள் உட்பட 10 பேர் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவர் மனைவி செல்வி (41), இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம்; திறக்கப்பட்ட 16 நாள்களில் சேதம்; அதிர்ச்சியில் மக்கள்

வடமாநிலங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்துவிழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந... மேலும் பார்க்க

சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு: சுரங்கத்தில் சிக்கிய 25 பேர்; 10 பேர் பலி? - தலைவர்கள் இரங்கல்

சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில், 'என்ஹெச்பிசி டீஸ்டா கட்டம் VI' நீர்மின் திட்டத்திற்காக 'ADIT-3' என்ற சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிலச்ச... மேலும் பார்க்க

கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; தீக்கிரையான வீடுகள்; நடந்தது என்ன?

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நாகராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் பெர்ஹ... மேலும் பார்க்க