செய்திகள் :

சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு: சுரங்கத்தில் சிக்கிய 25 பேர்; 10 பேர் பலி? - தலைவர்கள் இரங்கல்

post image

சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில், 'என்ஹெச்பிசி டீஸ்டா கட்டம் VI' நீர்மின் திட்டத்திற்காக 'ADIT-3' என்ற சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நிலச்சரிவு காரணமாக திங்கள்கிழமை இந்தச் சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது. இந்தத் துயரச் சம்பவத்தில் திட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 25 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள படேல் இன்ஜினியரிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீட்புப் பணிகளை வேகப்படுத்த மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் எங்களது திட்டக் குழுவினர் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு
சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு

மேலும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், கருவிகள் மற்றும் உதவிகளை உடனடியாக வழங்கியுள்ளதாகவும், சுரங்கப்பாதையைச் சீரமைத்து மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக உள்ளே செல்வதற்கு எங்களது பொறியாளர்கள் குழு இரவு பகலாகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தத் துயரமான சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; தீக்கிரையான வீடுகள்; நடந்தது என்ன?

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நாகராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் பெர்ஹ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்

கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர். பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட... மேலும் பார்க்க

மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம்

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பே... மேலும் பார்க்க

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட... மேலும் பார்க்க

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!

வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க