செய்திகள் :

மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம்

post image

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

அரசுப் பேருந்து மீது மோதிய வேகத்தில் மீண்டும் இடதுபுறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழல்குடையில் மோதியது. ஆனால் நிழற்குடை சேதமானது.

இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த நான்கு ஆண்கள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.

மேலும் இவ்விபத்தில் காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சரக டிஐஜி அபினவ் குமார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட... மேலும் பார்க்க

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!

வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

திருப்பூர்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட டேங்கர் லாரி - கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், ப... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

மகாராஷ்டிரா முழுக்க தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒடிந்து விழுந்து வருகிறது. மின்வயர்களும் அறுந்து விழுந்து வருகிறது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள காம்க... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக மேப்... மேலும் பார்க்க

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்; கேரளாவில் மீண்டும் சோகம்

கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனக்கம்பொயில் - மேப்பாடி' சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன. மலப்புறம் மற்றும் வயநாடு இடையே... மேலும் பார்க்க