செய்திகள் :

``உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க-வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள்!” - ராஜேந்திர பாலாஜி காட்டம்

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதியின்  அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி பழனிசாமி நம்மை விட அதிகமாக புகழ்ந்தவர்கள்தான் இன்று அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியுள்ளார்கள். அவர்களெல்லாம் மண்ணைக் கவ்வப்போகிறார்கள் . உங்களை வளர்த்த அ.தி.மு.க-விற்கு துரோகம் செய்துவிட்டு சாதாரண தொண்டர் சென்றால்கூட அதில் ஒரு நியாயம் உள்ளது.  

ராஜேந்திரபாலாஜி

ஆனால்,  அதிமுக கட்சியை வைத்து முழுமையாக பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு துரோகம் செய்துவிட்டு விட்டு சென்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்று வேஷம் போடுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. வினர் த.வெ.க.வில் இணைந்துள்ளதாகக் கூறுவது ஒரு செட்அப். அ.தி. மு.க-வின்  உண்மை தொண்டகள் ஒரு நாளும் கட்சி மாற மாட்டார்கள்.

மீண்டும் அவர்கள் தாய்க் கழகத்தில் இணையும் காலம் விரைவில் வரும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று சரித்திர  சாதனைகளைச் செய்ய  த.வெ.க-விற்கு செய்ய தகுதி உள்ளதா? த.வெ.க-வினர்  வேஷம் கட்டி ஆடுகிறார்கள். அவர்களின் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது.

விஜய் ஒரு மாஸ் நடிகர் என்பதை ஒத்துக்கொள்கிறேன். தேர்தலின் போது விஜய் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் நம்பி விட்டனர். இதனால்தான் த.வெ.க. வுக்கு கிராமங்களில் அதிகளவில் ஓட்டு கிடைத்தது. த.வெ.க-வின் வெற்றி நிலையான வெற்றி கிடையாது.

ராஜேந்திரபாலாஜி

 உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க.வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள். த.வெ.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் 150 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளை வைத்து ஆட்சி அமைத்துள்ளார்கள். இந்த ஆட்சியை வைத்துக்கொண்டு கரூரில் இந்த ஆட்டமா?  மேயராக, துணை முதல்வராக,  முதல்வராக இருந்த ஸ்டாலினை கொத்து புரோட்டா போடுவோம் என முதல்வர் விஜய் பேசுவது நியாயமா?  நானும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன்.  

அரசியல் ரீதியாக விமர்சனம் செய்துள்ளேன். எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேசியதால் பதிலடி கொடுத்துள்ளேன். ஆனால் நான்  ஸ்டாலினை அவமானமாகப்  பேசியதில்லை.

முதல்வர் பொறுப்பில் உள்ளவர் தார்மீகமாக பேச வேண்டும். இதற்கு முன்னர் எந்த ஒரு முதல்வரும் விஜய் பேசுவதை போல் யாரையும் வசைபாடியதில்லை. தவறு செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும்,  ஒரு முதல்வரே இப்படி பேசுவது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை காட்டுகிறது.

ஸ்டாலின்

வேட்பாளர்களையே பார்க்காமல், அவர்களைப் பற்றி எதுவும் தெரியாமல் மக்கள் வாக்களித்த ஒரே தேர்தல் இந்த தேர்தல்தான். எந்த நேரம் ஸ்டாலினுக்கு  கோபம் வருகிறதோ? அப்போது த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும், அவருக்கு கோபம் வர வேண்டும், வரும். அதுவரை த.வெ.க ஆட்சி நீடிக்குமா? ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்த வாய்ப்புள்ளதால் த.வெ.கவின் ஆட்சி மூன்றாண்டுகள் மட்டுமே நடைபெறும்” என்றார்.   

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க

ட்ரம்பின் வலதுகரம்; ஈரான் மீதான போரின் முக்கியஸ்தர்! - திடீர் மரணமடைந்த லிண்ட்சே கிரஹாம் யார்?

குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும், அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், தனது 71வது வயதில் திடீரென காலமானார். திடீர் உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

"'நீ இங்க வரவேணாம்; வேற கட்சிக்குப் போ'னு சொல்லிருக்கணும்; ஆனா..." - திமுகவை விமர்சிக்கிறாரா திருமா?

தர்மபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியபோது, "நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை. சிலர் விசிகவை எப்படியாவது சி... மேலும் பார்க்க

``ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் இந்த ஆட்சி நீடிக்காது.!" - அதிமுக ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ``இந்த நாடு உங்களுக்கென எழுதி க... மேலும் பார்க்க