``உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க-வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள்!” - ராஜேந்திர பாலாஜி...
"விஜய் படத்தில் விஜய்யை மட்டும்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்; அதை மாற்றியது இந்த இருவர்தான்" - அமீர்
மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'Train'.
இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூலை.12) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் மிஷ்கினைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். "மிஷ்கின் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர் கிடையாது.
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டவர்தான் அவர்... தன்னை பொதுவெளியில் வெளிக்காட்டிக் கொள்வதிலும் சரி, படம் எடுப்பதிலும் சரி தனக்கென்று ஒரு பாணியை வைத்திருப்பார்.
விமர்சனங்கள் வைக்கும்போது நான் இப்படித்தான் என்று அதை எதிர்கொள்வதில் மிஷ்கினுக்கு முதன்மை இடம் உண்டு. அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு என்னை அழைத்துச் சென்று நடனம் ஆட வைத்தார்.
மிஷ்கின் இப்படி நடிப்பாரா? என்று சொல்லும் அளவிற்கு ஆச்சரியப்பட வைக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி படங்களில் ரசிகர்களின் கண் அவர்களை மட்டும்தான் பார்க்கும். அதே மாதிரிதான் விஜய் படங்களும்.

ஆனால் விஜய் படத்திலேயே அருகில் இருப்பவர்களைப் பார்க்க வைத்தது இரண்டே பேர்தான். ஒருவர் விஜய் சேதுபதி, மற்றொருவர் மிஷ்கின். இசையிலும் மிஷ்கின் சிறப்பாகப் பணியாற்றுவார்.
எனக்கு தெரிந்து டி.ஆர் சாருக்குப் பிறகு மிஷ்கின்தான் என்று நினைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.





.webp)









