செய்திகள் :

Janaki: ``என் மெட்டுக்கு மெருகேற்றியவர்; பாட்டுக்கு அமுதூட்டியவர்" - டி.ராஜேந்தர் இரங்கல்

post image

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி.

இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடப்பட்ட இவர், நேற்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88.

இவரின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, நான்கு முறை தேசிய விருதுகளையும், எண்ணற்ற மாநில அரசுகளின் விருதுகளையும் வாரிக் குவித்த, தென்றல் இசைப் பாடகி, 'தேன்குரல் தேவகி' எஸ். ஜானகி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சை வாட்டுகிறது.

ஜானகி மறைவு
ஜானகி மறைவு

'நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னை தேடுதே' என்று நினைவில் நின்ற நெஞ்சில் ஒரு ராகம், தந்துவிட்டாரே நீங்காத சோகம் வசந்தம். பாடி வர, வைகை ஓடி வர, இளமை கூடி வர, இனிமை தேடி வர என்று என் மெட்டுக்கு மெருகேற்றியவர் பாட்டுக்கு அமுதூட்டியவர்.

சந்தன காற்றாம் சங்கதி ஊற்றாம் சங்கீத குயிலாம் என்னுடைய 'சம்சாரம் சங்கீதம்' படத்திலே என் மகன் சிலம்பரசனுக்காக 'ஐ எம் ஏ லிட்டில் ஸ்டார் ஆவே நான் சூப்பர் ஸ்டார்' என்று பாட்டு படித்தாயே... முத்திரை பதித்தாயே... இன்று நீங்காத நித்திரைக்குச் சென்றுவிட்டாயே என்று என்னுடைய நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டுவிட்டது.

அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தாருக்கும், இந்திய கலை உலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும், நேயர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Anbe Diana: ``நான் இந்த இடத்திற்கு வரக் காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு நன்றி" - ரம்யா ரங்கநாதன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Janaki: 55 வருடங்களுக்குப் பிறகு பத்ம பூஷனா? விருதை வாங்க மறுத்த ஜானகி; வைரலாகும் வீடியோ

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பின்னணிப் பாடகி ஜானகி நேற்று (ஜுலை.11) காலமானார். இவர் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

ஜானகி மறைவு: "சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களைத் தாங்கியிருக்கிறார்..." - இளையராஜா இரங்கல்

பின்னணி பாடகி ஜானகியின் மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜா ஜானகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியி... மேலும் பார்க்க

"ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள்" - மகள்கள் மீதான உருவக்கேலிக்கு குஷ்பு பதிலடி

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் மகள்கள் உருவக்கேலியைச் சந்தித்து வந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க

Anbe Diana:``'பெரம்பூர்' சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது" - நடிகர் சமுத்திரகனி

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் இரண்டாவது மகள் அனந்திதா. இயக்குநர் மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப... மேலும் பார்க்க