செய்திகள் :

Anbe Diana:``ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்" - சசிகுமார்

post image

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.

அன்பே டயானா பாரி இளவழகன் - யுவராஜ்
அன்பே டயானா பாரி இளவழகன் - யுவராஜ்

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான சசிகுமார், ``ஜூலை 17, 2026 அன்று வெளியாகவிருக்கும் 'அன்பே டயானா' திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போதே, படம் எவ்வளவு கலர்ஃபுல்லாகவும், பெரிய வெற்றிப் படமாகவும் அமையப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இயக்குநர் மற்றும் நடிகர் பாரி இளவழகனின் முந்தைய படமான 'ஜமா' ஒரு அருமையான படம். அதில் பெண் வேடமிட்டு பாரி ஆடிய நடனமும், கைகளை ஊன்றாமல் சட்டென்று அவர் கீழே அமர்ந்த அந்த ஆட்டமும் அசாத்தியமானது.

பலரும் அந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்கத் தவறிவிட்டனர். கலைநயம் மிக்க அந்தப் படம் பெரிய கமர்சியல் வெற்றியைப் பெற்றிருந்தால் பாரி வேறு தளத்திற்குச் சென்றிருப்பார். இப்போது அவர் 'அன்பே டயானா' என்ற ஒரு அழகான, கலகலப்பான குடும்பத் திரைப்படத்தைத் தந்துள்ளார்.

ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில் இந்த கமர்சியல் காமெடி படம் பாரிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும்.

அன்பே டயானா படக்குழு
அன்பே டயானா படக்குழு

வில்லன் பிம்பத்தில் இருந்து மாறி ஜாலியான தந்தையாக நடித்துள்ள சேத்தன், நடனத்தில் அசத்தியுள்ள கதாநாயகி ரம்யா ரங்கநாதன், இசையமைப்பாளர் பரத் சங்கர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

சுதாகர் இருந்தால்தான் காமெடி பண்ணுவியா கோபி? மேடையில் ரொம்ப நல்லவன் மாதிரி பேசிட்டுப் போற, நீ எப்போதுமே மேடையில் எங்களை என்டர்டெய்ன் செய்ய வேண்டும், சீரியஸாக இருக்கக் கூடாது'' எனக் கிண்டலாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் செட் பிராப்பர்ட்டி போல எல்லாப் படங்களிலும் நடித்து வரும் சுதர்சனின் வளர்ச்சியையும், எழுத்தாளர் சரவணனின் புத்தக வெளியீட்டிற்கு பணம் வாங்காமல் உதவிய அவரது நற்பண்பையும் மனதாரப் பாராட்டுகிறேன்" என்றார்.

"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் இரண்டாவது மகள் அனந்திதா. இயக்குநர் மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப... மேலும் பார்க்க

Anbe Diana: ``'டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க; ஹீரோவா வேணாம்' என்றார்கள்; ஆனால்..." - பாரி இளவழகன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர... மேலும் பார்க்க

Anbe Diana: ``டப்பிங் பேசும்போது எனக்கு கண்ணீர் வந்தது" - 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரோஜா!

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Janaki: ``உங்களது பெயரைத் தாங்கி நடித்திருப்பது, என் வாழ்நாளின் பெருமை" - திரிஷா இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி. இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்... மேலும் பார்க்க

What To Watch: `இதயம் முரளி டூ Peddi வரை'- இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.இதயம் முரளி - தமிழ்ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கியிருக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வா, காயடு லோஹர், பிரீத்தி முகுந்தன்... மேலும் பார்க்க

"எனக்கு வர்ற விருதுகளை விட, என் மகளோட இந்தக் கோல்டு மெடல் தான் எனக்கு பெருமை" - விஷால் எமோஷனல்

நேற்று, இன்று (ஜூலை 11, 12, 2026) என இரு தினங்களாக மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2026-27 கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் ஒரு பகுதியாக, இயக்குநர் மற்றும் நடிகர் விஷால் மாணவர்களு... மேலும் பார்க்க