செய்திகள் :

What To Watch: `இதயம் முரளி டூ Peddi வரை'- இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்!

post image
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.

இதயம் முரளி - தமிழ்

ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கியிருக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வா, காயடு லோஹர், பிரீத்தி முகுந்தன், பகத் பாசில், நட்டி, ரக்ஷன், நிஹாரிகா, ஏஞ்சலின், யஷாஸ்ரீ ராவ், சுதாகர் ஜெயராமன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

லவ் ஒ லவ் - தமிழ்

மகேஷ் ராஜேந்திரன் இயக்கி பவிஷ் நாராயண், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதயம் முரளி படத்தில்...
இதயம் முரளி படத்தில்...

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு - தமிழ்

தயாள் பத்மநாபன் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, சரவணன், 'லொள்ளு சபா' மாறன், லிசி ஆண்டனி, சுப்ரமணியம் சிவா, கவரா பாரதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஐ, நோபடி - மலையாளம்

நிசாம் பஷீர் இயக்கத்தில் பிருத்விராஜ், பார்வதி திருவோத்து, விஜயராகவன், அசோகன், நந்து ஆகிய நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஜூலை 9 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

லெனின் - தெலுங்கு

முரளி கிஷோர் அப்பூரு எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ போர்ஸே ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பெத்தி | Peddi
பெத்தி | Peddi

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்.

1. இக்கா (Ikka) - Netflix

2. பெத்தி (Peddi) - Netflix

3. பல்டி (Balti) - SonyLIV

4. பதி பத்னி அவுர் வோ தோ (Pati Patni Aur Woh Do) - JioHotstar

5. தி அபார்ட்மெண்ட் ஜாப் (The Apartment Job) - Netflix

6. நத்திங் டு லூஸ் (Nothing to Lose) - Netflix

7. ட்ரையிங் : சீசன் 5 (Trying: Season 5) - Apple TV+

8. லேண்ட் ஆஃப் ஃபுட்பால் (Land of Football) - SonyLIV

Anbe Diana: ``'டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க; ஹீரோவா வேணாம்' என்றார்கள்; ஆனால்..." - பாரி இளவழகன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர... மேலும் பார்க்க

Anbe Diana:``ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்" - சசிகுமார்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Anbe Diana: ``டப்பிங் பேசும்போது எனக்கு கண்ணீர் வந்தது" - 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரோஜா!

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Janaki: ``உங்களது பெயரைத் தாங்கி நடித்திருப்பது, என் வாழ்நாளின் பெருமை" - திரிஷா இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி. இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்... மேலும் பார்க்க

"எனக்கு வர்ற விருதுகளை விட, என் மகளோட இந்தக் கோல்டு மெடல் தான் எனக்கு பெருமை" - விஷால் எமோஷனல்

நேற்று, இன்று (ஜூலை 11, 12, 2026) என இரு தினங்களாக மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2026-27 கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் ஒரு பகுதியாக, இயக்குநர் மற்றும் நடிகர் விஷால் மாணவர்களு... மேலும் பார்க்க

`Honourable CM' - ஜன நாயகன் பட போஸ்டரைப் பகிர்ந்த விஜய்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆன... மேலும் பார்க்க