செய்திகள் :

Janaki: ``உங்களது பெயரைத் தாங்கி நடித்திருப்பது, என் வாழ்நாளின் பெருமை" - திரிஷா இரங்கல்

post image

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி.

இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடப்பட்ட இவர், நேற்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88.

இவரின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகை திரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``என்னுடைய மிகச் சிறப்பான திரைப்படங்கள் ஒன்றில் உங்களது பெயரைத் தாங்கி நடித்திருப்பது, என் வாழ்நாளின் மிகச்சிறந்த பெருமைகளில் ஒன்றாக எப்போதும் இருக்கும்.

ஆனால், உங்களை அறிந்திருப்பதும், உங்களது அன்பைப் பெற்றிருப்பதும் நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயமாகும்.

உங்களது அரவணைப்பிற்கும், கனிவிற்கும், சிரிப்பிற்கும் மற்றும் 'மிகச்சிறந்த கலைஞர்கள் எப்போதும் மிக எளிமையான மனிதர்களாகவே இருப்பார்கள்' என்பதை எனக்கு எப்போதும் நினைவூட்டியதற்கும் நன்றி. உங்களது குரல் என்றும் வாழும்.

அமைதியாக உறங்குங்கள் ஜானகி அம்மா. உங்களை நான் மிகவும் மிஸ் செய்வேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Anbe Diana: ``'டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க; ஹீரோவா வேணாம்' என்றார்கள்; ஆனால்..." - பாரி இளவழகன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர... மேலும் பார்க்க

Anbe Diana:``ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்" - சசிகுமார்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Anbe Diana: ``டப்பிங் பேசும்போது எனக்கு கண்ணீர் வந்தது" - 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரோஜா!

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

What To Watch: `இதயம் முரளி டூ Peddi வரை'- இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.இதயம் முரளி - தமிழ்ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கியிருக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வா, காயடு லோஹர், பிரீத்தி முகுந்தன்... மேலும் பார்க்க

"எனக்கு வர்ற விருதுகளை விட, என் மகளோட இந்தக் கோல்டு மெடல் தான் எனக்கு பெருமை" - விஷால் எமோஷனல்

நேற்று, இன்று (ஜூலை 11, 12, 2026) என இரு தினங்களாக மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2026-27 கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் ஒரு பகுதியாக, இயக்குநர் மற்றும் நடிகர் விஷால் மாணவர்களு... மேலும் பார்க்க

`Honourable CM' - ஜன நாயகன் பட போஸ்டரைப் பகிர்ந்த விஜய்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆன... மேலும் பார்க்க