செய்திகள் :

"எனக்கு வர்ற விருதுகளை விட, என் மகளோட இந்தக் கோல்டு மெடல் தான் எனக்கு பெருமை" - விஷால் எமோஷனல்

post image

நேற்று, இன்று (ஜூலை 11, 12, 2026) என இரு தினங்களாக மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2026-27 கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமின் ஒரு பகுதியாக, இயக்குநர் மற்றும் நடிகர் விஷால் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது விஷால், "என்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் படிச்ச என்னோட மகள் தீபிகா என்கிற கல்லூரி மாணவி இன்னைக்கு தனியார் கல்லூரி ஒன்றில் கல்வியில் கோல்டு மெடல் வாங்கியிருக்காங்க.

எனக்கு நான் நடிச்ச படங்களுக்கு கிடைக்குற விருதுகளை விட, இது தான் பெருமை" என்று பேசினார்.

விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா
தீபிகா
தீபிகா
விஷால் - தீபிகா
விஷால் - தீபிகா

விஷாலுக்கு சர்ப்பரைஸ் மொமெண்டாக தீபிகாவை முகாமிற்கு அழைத்து வந்திருந்தோம்.

மேடையேறிய தீபிகா, "என்னோட ப்ளஸ் 2-ல 600-க்கு 551 மார்க் வாங்கியிருந்தேன். ஆனா, எங்க குடும்பத்தால என்னை மேல படிக்க வைக்க முடியாத சூழல்.

அப்போ தான் தேவி அறக்கட்டளை மூலமா கல்லூரில சேர்ந்தேன். இப்போ நான் கோல்டு மெடலிஸ்ட். நன்றி விஷால் சார்" என்று பேசினார்.

கடலூர் விழமங்கலத்தை சேர்ந்தவர் தீபிகா. அம்மா, அப்பா இருவரும் விவசாயிகள். ப்ளஸ் 2-வில் 600-க்கு 551 மார்க் பெற்றாலும், அவரை குடும்பத்தால் படிக்க வைக்க முடியாத நிதிச் சூழல்.

இதனால், தீபிகா தேவி அறக்கட்டளையை அணுகியிருக்கிறார். அறக்கட்டளையில் நேர்காணலில் பாஸ் ஆன மாணவிக்கு தனியார் கல்லூரி ஒன்றில் BCA படிப்பிற்கு சீட் கிடைத்திருக்கிறது.

தற்போது படிப்பை நிறைவு செய்து கோல்டு மெடலையும் வாங்கியிருக்கிறார்.

முகாமில் பேசும் போது விஷால், " இந்த குழந்தையை நான் கடன் வாங்கி தான் படிக்க வச்சேன். நான் செஞ்சது சரிதான்னு என் பொண்ணு தீபிகா நிரூபிச்சு காட்டி இருக்காங்க. தமிழ்நாட்டில் நிதி ரீதியாக கஷ்டப்படும் சூழலில் வளரும் மாணவர்கள் யாராக இருந்தாலும் தேவி அறக்கட்டளையை அணுகலாம் என்பதற்கு தீபிகா சிறந்த உதாரணம். வரும் காலத்துல தீபிகாவே நிறைய மாணவர்களை படிக்க வைப்பாங்க அப்படிங்கிறது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் " என்று நெகிழ்ந்தார் .

`Honourable CM' - ஜன நாயகன் பட போஸ்டரைப் பகிர்ந்த விஜய்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆன... மேலும் பார்க்க

`இன்றைக்கும் அவர் என்னை ஜெயித்துவிட்டார்..!'- ஒளிப்பதிவாளர் செழியன் குறித்து விஜய் மில்டன் உருக்கம்

பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று (ஜூலை 10) காலமானார். தமிழ் சினிமாவின் ஜாம்பவானான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமா பயணத்தைத் தொடங்க... மேலும் பார்க்க

Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்?!

பெற்றோர் அரவணைப்பின்றி வளரும் இதயாவுக்கு (அதர்வா), அவனுடைய மாமாவும் நண்பர்களும்தான் எல்லாம்! பள்ளிப் பருவத்தில் இதயா, டியூஷன், டென்னிஸ் பயிற்சி எனச் சுற்றி, சமந்தாவை (ப்ரீத்தி முகுந்தன்) ஒருதலையாகக் க... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: ``மோக்ஷாவா இருந்த என்னை மீனு டீச்சரா மாத்திட்டாரு" - எமோஷ்னலான நடிகை மோக்ஷா

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்ப... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: ``விஷ்ணுவுடன் 3 படங்கள் பண்ணதுக்கு எனக்கு 3 அவார்டுகள் கொடுக்கலாம்" - செல்லா அய்யாவு

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்பர் 2 அன்று வெளியான 'கட்டா குஸ்தி' முதல் ப... மேலும் பார்க்க

Gatta Kusti 2: ``என் வாழ்க்கையில் நான் நினைத்துக்கூட பார்க்காத.!" - கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்பர... மேலும் பார்க்க