செய்திகள் :

இசைக்குயில் எஸ்.ஜானகி காலமானார் - மைசூரில் உயிர் பிரிந்தது!

post image

இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடிய பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, இன்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்திலுள்ள பலல்படலா என்ற ஊரில் 1938, ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி பிறந்த இவர், குழந்தைப் பருவத்திலேயே முறையாக இசை கற்றவர். தன்னுடைய பதினெட்டாவது வயதில் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு வாங்கியிருக்கிறார்.

தமிழில் முதன் முதலாக பின்னணி பாடகராக பாடும் வாய்ப்பு, `விதியின் விளையாட்டு’ படத்தில் பாடக் கிடைத்தது. அந்த முதல் பாடலே அடுத்த முறை கண்டசாலாவுடன் சேர்ந்து தெலுங்கு பாடலைப் பாடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

அறிமுகமான வருடத்திலேயே ஆறு மொழிகளில் பாடிய சாதனை இவருடையது.

எஸ். ஜானகி

கொஞ்சும் சலங்கை படத்தில் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்துடன் இணைந்து இவர் பாடிய ‘சிங்கார வேலனே தேவா' பாடல் இன்று வரை இசை ரசிகர்கள் விரும்பிக் கேட்கிற பாடல் எனச் சொல்லலாம்.

தமிழில் இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற படம் என்றால் அது இளையராஜா இசையில் வெளியான அன்னக்கிளி தான்.

’அன்னக்கிளி உன்னைத் தேடுதே' பாடல் தமிழ் சினிமா இருக்கும் வரை எல்லாருக்கும் இனிக்கும் பாடலாக இருக்கும் என்றால் மிகையில்லை.

அன்னக்கிளியைத் தொடர்ந்து இவர் பாடல் இடம் பெறாத படங்களே இல்லை என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவானது எனச் சொல்லலாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட 17 மொழிகளில் சுமார் 16000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

பாடகி ஜானகி ஒரு தெலுங்கு படத்துக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார்.

இளமைப் பருவத்தில் மகனுடன் எஸ்,ஜானகி

சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறையும், தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருதை ஐந்து முறையும் பெற்றிருக்கும் இவருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்தது மத்திய அரசு. ஆந்திரா, கேரளா, ஒடிசா அரசின் விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

இவரது கணவர் ராமபிரசாத். ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

எஸ்.ஜானகியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜாவும் பாக்யராஜும் – நாம் கொண்டாடத் தவறிய 5 அரிய திரைப்படங்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு 'A' சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆன... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதை பார்ப்பது..'- விஜய்யைச் சந்தித்த அதர்வா, கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: `கணவரை விட உங்களை நேசிக்கிறேன்!’ - ரசிகையின் பேச்சு; பக்குவமாக பதிலளித்த ஷாருக் கான்

திரைப்பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வழக்கம். அப்படி வரும் எதிர்பாராத கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் பிரபலங்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள் என... மேலும் பார்க்க

Jana Nayagan: ஜனநாயகன் ஜூலை ரிலீஸ்: `முதல்வர்’ விஜய் படத்தின் தணிக்கைச் சிக்கல் முடிவுக்கு வந்தது!

முன்னணி நடிகராக இருந்து தற்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஜனநாயகன்'. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல... மேலும் பார்க்க