செய்திகள் :

Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு 'A' சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்

post image

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போனது.

விஜய் - பூஜா ஹெக்டே| ஜனநாயகன்
விஜய் - பூஜா ஹெக்டே| ஜனநாயகன்

நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட இப்படம், தேர்தலுக்கு முன்பாகவே சென்சார் சான்றிதழ் பெற்று வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. இதற்கிடையில் தேர்தல் முடிந்து, அதில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்று திரையுலகமே எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று (ஜூலை 9) ஒருவழியாக இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தணிக்கை வாரியம் "ஜனநாயகன்" படத்திற்கு இறுதியாக "ஏ" (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 24 ஆண்டுகள் கழித்து விஜய் நடிப்பில் 'ஏ' சான்றிதழ் பெறும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்றும் கூறப்படுகிறது. படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்க இத்தனை காலம் தாமதப்படுத்திய தணிக்கை வாரியம், தற்போது எந்தெந்த காட்சிகளை நீக்கியுள்ளது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஜனநாயகன் | விஜய்
ஜனநாயகன் | விஜய்

விஜய்க்கு 18 வயதுக்குக் கீழான சிறுவர், சிறுமியர் மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்த "ஏ" சான்றிதழ் வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலை எழுந்துள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி "ஏ" சான்றிதழ் பெற்ற "கூலி" திரைப்படம் வசூலில் பின்னடைவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து, வரும் ஜூலை 24-ம் தேதி படத்தை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதை பார்ப்பது..'- விஜய்யைச் சந்தித்த அதர்வா, கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: `கணவரை விட உங்களை நேசிக்கிறேன்!’ - ரசிகையின் பேச்சு; பக்குவமாக பதிலளித்த ஷாருக் கான்

திரைப்பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வழக்கம். அப்படி வரும் எதிர்பாராத கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் பிரபலங்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள் என... மேலும் பார்க்க

Jana Nayagan: ஜனநாயகன் ஜூலை ரிலீஸ்: `முதல்வர்’ விஜய் படத்தின் தணிக்கைச் சிக்கல் முடிவுக்கு வந்தது!

முன்னணி நடிகராக இருந்து தற்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஜனநாயகன்'. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல... மேலும் பார்க்க

குருவைத் தொடர்ந்து சீடன்; தூறல் நின்னு போச்சு! - தமிழ் சினிமாவின் இரட்டைப் பேரிழப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவர் மனித மனங்களை இயக்கினார்!- பாக்யராஜ் என்ற மனித இயல்பின் மொழிபெயர்ப்பாளர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கே.பாக்யராஜ்: கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு; மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி!

தமிழ்த் திரையுலகில் `திரைக்கதை மன்னன்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் கே.பாக்யராஜ். 1980-களில் தமிழ் சினிமாவின் வணிக சமன்பாடுகளையும், கதை சொல்லும் பாணியையும் மு... மேலும் பார்க்க