செய்திகள் :

அய்யய்யோ! என் பணம் போயிடுமா? சந்தை ஏற்ற இறக்கத்தில் என்ன செய்ய வேண்டும்?

post image

சந்தையின் ஏற்ற இறக்கம் (Volatile Markets) என்பது தவிர்க்க முடியாத ஒரு இயற்கை விதி. புயல் வரும் என்று பயந்து கடலுக்குப் போகாமல் இருக்க முடியாது; ஆனால், கப்பலை எப்படிச் செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டால் கரையேறிவிடலாம்.

அதிர்ந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தையில், எங்கே, எப்படி, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? பார்ப்போம்...

1. எங்கே முதலீடு செய்ய வேண்டும்?

சந்தை ஆட்டம் காணும்போது உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோ (Portfolio) உடையாமல் இருக்க, பணத்தை ஒரே இடத்தில் குவிக்கக் கூடாது. இதற்கு அசெட் அலோகேஷன் (Asset Allocation) என்று பெயர்.

பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity Funds): நீண்ட கால இலக்குகளுக்கு (7+ ஆண்டுகள்) லார்ஜ் கேப் (Large Cap) மற்றும் ஃபிலெக்ஸி கேப் (Flexi Cap) ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். சந்தை சரிந்தாலும், இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி உங்களைக் காப்பாற்றும்.

கடன் சார்ந்த ஃபண்டுகள் (Debt Funds/FD): அவசரத் தேவைகளுக்கும், குறுகிய கால இலக்குகளுக்கும் (1-3 ஆண்டுகள்) லிக்விட் ஃபண்டுகள் (Liquid Funds) அல்லது ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் (Arbitrage Funds) பாதுகாப்பானவை.

தங்கம் (Gold): பங்குச்சந்தை சரியும்போது தங்கம் விலை ஏறும். உங்கள் மொத்த முதலீட்டில் 5% முதல் 10% வரை மட்டும் கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்யலாம்.

2. எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும்போது மொத்தப் பணத்தையும் ஒரே நாளில் முதலீடு செய்வது (Lumpsum) ஆபத்தானது.

தக்காளி விலை ஃபார்முலா (Rupee Cost Averaging): தக்காளி விலை ₹100 ஆக இருக்கும்போது நீங்கள் 1 கிலோ வாங்குவீர்கள். அதே விலை ₹50 ஆகக் குறையும்போது 2 கிலோ வாங்குவீர்கள். சராசரியாகப் பார்த்தால் இறுதியில் தக்காளி 1 கிலோ ₹ 67 ரூபாய்க்கு மலிவாகக் கிடைத்திருக்கும்.

இதே தத்துவம் மியூச்சுவல் ஃபண்டுகளின் SIP (Systematic Investment Plan) முறைக்கும் பொருந்தும்.

* சந்தை ஏறும்போது உங்களின் முதலீட்டிற்கு குறைந்த யூனிட்டுகள் (Units) கிடைக்கும்.
* சந்தை விழும்போது அதே பணத்திற்கு அதிக யூனிட்டுகள் கிடைக்கும்.
* இதனால், நீண்ட காலத்தில் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் சமன் செய்யப்பட்டு, உங்களுக்கு நிலையான, சிறப்பான லாபம் (Compounding) கிடைக்கும்.

Power of Compounding

3. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

இதற்குக் கட்டைவிரல் விதி (Thumb Rule) ஒன்று உள்ளது: 100 மைனஸ் உங்கள் வயது (100 - Age Rule)

* உதாரணமாக, உங்கள் வயது 30 எனில்: ₹100 - 30 = ₹70. உங்கள் சேமிப்பில் 70% தொகையைப் பங்குச்சந்தை மியூச்சுவல் ஃபண்டுகளிலும் (Equity), மீதமுள்ள 30% தொகையைப் பாதுகாப்பான கடன் திட்டங்களிலும் (Debt/FD) முதலீடு செய்யலாம்.

* உங்கள் வயது 50 எனில், பங்குச்சந்தையில் 50%, கடன் திட்டங்களில் 50% என மாற்றிக் கொள்ள வேண்டும். வயது கூடக் கூடப் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்.

முக்கிய குறிப்பு: உங்களின் பொருளாதார பின்புலம் நன்றாக இருந்தால் வயதை மீறி ரிஸ்க் எடுக்கலாம். இல்லை என்றால் ரிஸ்க்கை குறைத்துக்கொள்வதே நல்லது. சந்தையில் பணத்தை இழக்காமல் இருந்தாலே, லாபம் தானாகக் கிடைக்கும்.

யதார்த்தமான இலக்கு:

நீங்கள் மாதம் ₹15,000 வீதம் 10 ஆண்டுகள் தொடர்ந்து SIP செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். சராசரியாக 12% வருடாந்திர கூட்டு வளர்ச்சி கிடைத்தால் கூட, 10 வருட முடிவில் உங்கள் கையில் ₹34.5 லட்சம் இருக்கும் (நீங்கள் முதலீடு செய்தது ₹18 லட்சம் மட்டுமே).

கீழே சென்றால்தான் லாபம் கிடைக்கும்!

சந்தை கீழே போகும்போதுதான் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் 'ஆஃபர் விலையில்' மலிவாகக் கிடைக்கின்றன. எனவே, சந்தை வீழ்ச்சியைக் கண்டு பயந்து SIP-ஐ நிறுத்தாதீர்கள். சந்தையின் ஏற்ற இறக்கங்களை உங்களது லாபமாக மாற்றுவது உங்களின் 'பொறுமை' மட்டுமே!

(குறிப்பு: மேற்குறிப்பிட்ட ஆலோசனை பொதுவானது மட்டுமே. உங்களின் ரிஸ்க் புரொஃபைலுக்கு ஏற்ற அசெட் அலோகேஷன் / ஃபண்டுகளிலேயே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.)

நீங்களும் சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியாக முதலீடு செய்ய வேண்டுமா? எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்!

தலைப்பு: ஏறி இறங்கும் பங்குச் சந்தை - எப்படி? எதில்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? மார்க்கெட் அப்டேட் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி
நாள்: ஜூலை 12, 2026, ஞாயிறு
நேரம்: காலை 11:00 - 12:30 மணி - இந்திய நேரம்
பேச்சாளர்: லாபம் டீம்

https://labham.money/events/webinar-jul12-2026?utm_source=labham_email&utm_medium=emailer&utm_campaign=webinar_jul12_2026

லாபம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்ய: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் ஆவணங்களை படிக்கவும்.

வேலை செய்யும்போதே 2-வது வருமானம் பெறுவது எப்படி? Gulf NRI-களே கவனியுங்க!

ஷேக் சையத் ரோடில் காரை ஓட்டும்போது அல்லது மரீனா ஏரியாவில் காபி குடிக்கும்போது ஒவ்வொரு வளைகுடா (Gulf) வாழ் தமிழர்களும் தனக்குள்ளே சொல்லிக்கொள்ளும் மந்திரச் சொல் இது.கைநிறைய சம்பளம், டாக்ஸ்-ஃப்ரீ வருமான... மேலும் பார்க்க

தனிநபர் வருமானம்: குஜராத், உ.பி-யை முந்திய தமிழ்நாடு! - உலக வங்கி சொல்லும் புள்ளி விவரம் என்ன?

இன்றைக்குப் பலருக்கும் இருக்கிற மிகப் பெரிய குறை, நமக்குப் போதிய வருமானம் இல்லை என்பதுதான். பலரும் நேரம், காலம் பார்க்காமல் உழைக்கத்தான் செய்கிறார்கள். காலை 10 மணி தொடங்கி மாலை 7 மணி வரை கட்டாயம் வேலை... மேலும் பார்க்க

செல்வச் செழிப்புக்கான ரகசியம்: சம்பள உயர்வை சொத்தாக மாற்றுவது எப்படி?

லைஃப்ல நல்ல நிலைமைக்கு வரணும்,ஃபைனான்சியல் ஃப்ரீடம் (Financial Freedom)அடையணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனா, நம்மள நிறைய பேர் பண்ற தப்பு என்ன தெரியுமா? சம்பளம் அதிகமான உடனே, ஆடம்பரச் செலவுகளையு... மேலும் பார்க்க

EPFO, ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை.! இந்த ஜூலை மாதத்திற்கான 'செக்லிஸ்டை' தெரிஞ்சுக்கோங்க!

2026-ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் காலடி எடுத்து வைக்கிறோம் இன்று. இன்று (ஜூலை 1) முதல் இந்திய நிதித் துறை சார்பாக நாம் என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும் இங்கே பார்த்துவிடுவோம். வாங்க...> ஊழியர் வர... மேலும் பார்க்க

'60 வயதில் வேண்டாம்; 45 வயதில் ஓய்வு' - இயர்லி ரிட்டைர்மென்டுக்கு எவ்வளவு தொகை தேவை?

திங்கட்கிழமை காலை அலாரம் அடித்தும், கணவன் ஒரு பக்கம் லேப்டாப்பைத் திறக்க, மனைவி இன்னொரு பக்கம் பைக்கை எடுக்க, வீடே ஒரு பரபரப்பான பந்தயக் களம் போல மாறும். இருவருக்கும் கைநிறையச் சம்பளம் வந்தாலும், அந்த... மேலும் பார்க்க

Retirement Fund: 50 வயதைக் கடந்தவர்கள் Lumpsum முதலீடு செய்வது எப்படி?

ஓய்வுக்காலம் நெருங்கும்போது, "என் உழைப்பின் சேமிப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீடிக்குமா?" என்ற கவலை ஒவ்வொரு மனிதருக்கும் எழும்.50 வயதைக் கடந்த இந்தியர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் (FD) தான் எப்போதும் முதல... மேலும் பார்க்க