செய்திகள் :

Retirement Fund: 50 வயதைக் கடந்தவர்கள் Lumpsum முதலீடு செய்வது எப்படி?

post image

ஓய்வுக்காலம் நெருங்கும்போது, "என் உழைப்பின் சேமிப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீடிக்குமா?" என்ற கவலை ஒவ்வொரு மனிதருக்கும் எழும்.

50 வயதைக் கடந்த இந்தியர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் (FD) தான் எப்போதும் முதல் சாய்ஸ். எஃப்டி-க்கள் மூலதனப் பாதுகாப்பையும், மாதாந்திர வட்டியையும், அசைக்க முடியாத நிம்மதியையும் தருகின்றன. தலைமுறை தலைமுறையாக இந்தியர்களின் நம்பிக்கையாக எஃப்டி இருக்கிறது.

ஆனால், தற்போதைய டிஜிட்டல் பொருளாதார சூழலில் எஃப்டி மட்டுமே உங்களின் ஒட்டுமொத்த ஓய்வுக்கால தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்துவிடுமா என்பதை ஆழமாக யோசிக்க வேண்டும்.

பழைய பணவீக்கம்... என்றுமே பிரச்னைதான்!

இன்றைய சவாலே, பணவீக்கத்தை வெல்லும் அளவுக்குப் பணத்தை உருவாக்குவதுதான். இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிடும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி பணவீக்கம் 5% முதல் 6% ஆக உள்ளது.

இதன் பொருள், அடுத்த 12 ஆண்டுகளில் விலைவாசி இருமடங்காக உயரும்! பெட்ரோல், உணவு, மருத்துவ செலவு என எல்லாமே 2 மடங்கு அதிகரிக்கும்... எஃப்டி நிலையான வட்டி தந்தாலும், நீண்டகாலத்தில் இந்த ராக்கெட் வேக விலைவாசி உயர்வை அதனால் சமாளிக்க முடியாது. இதனால்தான், முதலீட்டைப் பிரித்து வைக்கும் டைவர்சிஃபைடு உத்தி தேவைப்படுகிறது.

hybrid funds / equity debt
hybrid funds / equity debt

ரிஸ்க்கைக் குறைக்கும் ஹைபிரிட் ஃபண்டுகள்

இந்திய சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) அமைப்பின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Hybrid Mutual Funds) பங்குகளையும், கடன் பத்திரங்களையும் கலந்து முதலீடு செய்கின்றன. கடன் பத்திரங்கள் முதலீட்டிற்கு ஸ்திரத்தன்மையைத் தர, பங்குகள் பணவீக்கத்தை வெல்லும் நீண்டகால வளர்ச்சியைத் தருகின்றன.

உங்களிடம் ரூ. 1 கோடி ஓய்வூதியத் தொகை இருக்கிறது என வைப்போம். பாதுகாப்பு மற்றும் அவசரத் தேவைகளுக்காக 60% தொகையை (ரூ. 60 லட்சம்) எஃப்டி மற்றும் அரசு சேமிப்புத் திட்டங்களிலும், நீண்டகால பணவீக்கத்தை வெல்ல 40% தொகையை (ரூ. 40 லட்சம்) ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் பிரிக்கலாம். இதிலிருந்து மாத வருமானமாக ₹34000 கிடைக்கும். (ஆனால் இது வளராது).

மியூச்சுவல் ஃபண்ட் பகுதியில் இருந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற எஸ்.டபிள்யூ.பி (SWP) வசதியைப் பயன்படுத்தலாம். உலகளாவிய நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பான 4% விதியின்படி (Safe Withdrawal Rate), இந்த ரூ. 40 லட்சத்திலிருந்து ஆண்டுக்கு ரூ. 1,60,000 - மாதம் சுமார் ரூ. 13,333, பென்ஷன் போல எடுக்கலாம்.

இந்த ஹைபிரிட் ஃபண்ட் மிதமான 10% நீண்டகால வருடாந்திர வளர்ச்சியைத் தந்தால் கூட, நீங்கள் எடுக்கும் 4% போக, மீதமுள்ள 6% லாபம் அசலோடு சேர்ந்து கொண்டே இருக்கும். இதனால் அசல் குறையாமல் வளர்வதோடு, காலப்போக்கில் பென்ஷன் தொகையையும் உங்களால் உயர்த்திக் கொள்ள முடியும்.

எஃப்டி வட்டி மட்டுமே உங்களைப் பணவீக்கத்திலிருந்து காப்பாற்றாது. ரிசர்வ் வங்கி மற்றும் செபி கண்காணிப்பில் உள்ள இந்தத் திட்டங்கள் உங்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கி தரும்.

ஓய்வுக்காலத் திட்டமிடல் என்பது அதிக லாபத்திற்கான ரேஸ் அல்ல. அது மூலதனப் பாதுகாப்பு மற்றும் மாதாந்திர வருமானத்திற்கான உத்தி. எஃப்டி உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும்; ஹைபிரிட் ஃபண்டுகள் வளர்ச்சியைத் தரும். இரண்டும் இணைந்தால், உங்கள் ஓய்வுக்காலம் என்றும் நிம்மதியானது!

Labham Workshop June 28 2026

என்னுடைய லம்ப்சம் சேமிப்பை எப்படி 10% வளர்ச்சி தரும் முதலீடாக மாற்றுவது?

உங்களுக்கு 50+ வயதா?

மேலே குறிப்பிட்டது போல உங்களுடைய மொத்த சேமிப்பை எப்படி முதலீடாக மாற்றுவது?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SWP துவங்குவது எப்படி?

எனக்கு எவ்வளவு ரிட்டன்ஸ் கிடைக்கும்?

இதன் சாதக பாதகங்கள் என்ன?

அனைத்தையும் அறிந்துகொள்ள வரும் ஞாயிறு, ஜூன் 28 காலை 11 மணிக்கு 'லாபம்' வழங்கும் லம்சம் முதலீட்டு வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-jun28-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jun28_2026

ரூ. 50,000 பென்ஷன் கனவு: 40 வயதைத் தொட்ட Gulf NRI-கள் இந்தியாவில் சொகுசாக ரிட்டையர் ஆவது எப்படி?

வளைகுடா (Gulf) நாடுகளில் வாழும் பெரும்பாலான NRI-களின் வாழ்க்கை ஒரே மாதிரியான ட்ராக்கில்தான் பயணிக்கிறது.சிறந்த எதிர்காலத்தை தேடி, 20 அல்லது 30 வயதில் நீங்கள் இந்தியாவை விட்டு புறப்படுகிறீர்கள். சவுதி,... மேலும் பார்க்க

50% விலை குறைந்த பிட்காயின்... திகைத்து நிற்கும் முதலீட்டாளர்கள்!

இந்தியாவில் பிட்காயினில் பணம் போட்டவர்கள் அனைவரும், 'ஏன்தான் இதில் பணம் போட்டோமோ! 50% நஷ்டம் வந்துவிட்டதே' என்று பரிதவித்துக்கொண்டு இருக்கிறார்கள். பிட்காயினின் விலை இப்படி இறங்கிக்கொண்டே இருந்தால், அ... மேலும் பார்க்க

SpaceX: IPO விலையைவிடக் குறைந்தது... இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?

எதாவது ஒரு நிறுவனம் தனது பங்குகளை ஐ.பி.ஒ மூலம் வெளியிடும்போது பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள். காரணம், ஐ.பி.ஒ வந்தவுடன் அந்தப் பங்கின் விலை சட்டென 30% , 40% உயரும். அப்படி உயர்ந்தால், அந்தப... மேலும் பார்க்க

மாதம் ₹100000 2-வது வருமானம்! கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் NRI Financial Plan!

கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் என வளைகுடா நாடுகளில் வெயிலில் உழைத்து ஊதியம் சேர்க்கும் நண்பர்களே! ஒரு நிமிடம் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். 'இதே ஓட்டத்தை இன்னும் எத்தனை காலத்துக்கு ஓடப்போகிறோம்?' வர... மேலும் பார்க்க

'இன்று ₹15 லட்சம்; 8 ஆண்டில் ₹28 லட்சம்' - கல்லூரிக் கட்டணத்திற்குத் திட்டமிடுவது எப்படி?

40 வயதைக் கடந்த பெற்றோரா நீங்கள்? உங்களுக்கு நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் இருக்கலாம். ஆனால், இரவு தூங்கும்போது மனதிற்குள் ஒரு சின்ன பயம் எட்டிப் பார்க்கும். அது பணமில்லாததால் வரும் பயம் அல்ல. குழந... மேலும் பார்க்க

எதிர்காலத்துக்குப் பணத்தை சேர்க்கப் போறீங்களா? - இந்த 5 விஷயங்களை அவசியம் கவனியுங்க பாஸ்.!

நம்முடைய எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்பாக இருக்கட்டும், குழந்தைகள் வளர்ந்து, அவர்களுக்குத் திருமணம... மேலும் பார்க்க