செய்திகள் :

கரூர்: `தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா தவெக அரசு?'- சிபிஎம் சண்முகம்

post image

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியிருக்கிறார்.

முதல்வர் விஜய் - கரூர் சம்பவம்
முதல்வர் விஜய் - கரூர் சம்பவம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது.

மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறார்.

``திருமாவளவன்: பாலுக்கும் காவல் - பூனைக்கும் காவல் என்கிறார்" - நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், கரூர் சம்... மேலும் பார்க்க

`மாணவர்கள் பற்றாக்குறை' - 3 அரசு பள்ளிகள் மூடல்... உசிலம்பட்டியில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலேயே ‘கள்ளர் சீரமைப்புத்துறை’ என... மேலும் பார்க்க

விடைபெறுகிறார் ஈரான் உச்சத் தலைவர் காமேனி: இறுதி ஊர்வலத்தின் முக்கிய தருணங்களின் தொகுப்பு!

பிப்ரவரி 28, 2026...ஈரான் உச்சத் தலைவரான அயோதுல்லா அலி காமேனியின் மூச்சை நிறுத்தியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுகள். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக, ஈரானுக்கு, ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கு தலைமை பொறுப... மேலும் பார்க்க

'எம்எல்ஏ-க்களை வாங்குவதில் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து..!'- முதல்வரைச் சாடும் உதயநிதி

‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் கர்நாடக நீர் பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் ... மேலும் பார்க்க

``முதல்வரின் நேரடிப் பொறுப்பு துறையிலேயே ஊழல் நடைபெறுகிறது" - சு.வெங்கடேசன் ஆவேசம்!

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேச... மேலும் பார்க்க

இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-வில் ஐக்கியமாகிறாரா?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை, ஓசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி புறக்கணித்தது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.எடப்ப... மேலும் பார்க்க