செய்திகள் :

`தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?' - `கொடி' அரசியலின் பின்னணி என்ன?

post image

நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்ட ரசிகர் மன்றக் கொடி பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் நடிகராக இருந்தபோது ரசிகர் மன்றக்கொடி இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை அடுத்த கட்ட அரசியலுக்கான முதல் அடி, தனுஷ் சர்வ நிச்சயமாக அரசியலுக்கு வருகிறார் என்பதாக அறுதியிட்டு செய்திகள் சொல்லப்பட்டன.

தனுஷ் ரசிகர் மன்ற கொடி
தனுஷ் ரசிகர் மன்ற கொடி

இப்படி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாக விஜயகாந்த், விஜய் ஆகியோர் வரிசையில் விஜய்யும் சுட்டிக்காட்டப்பட இதன் உண்மை குறித்து விசாரித்தோம்.

சமீப காலங்களில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஏரியா வாரியாக ரசிகர்களை வரவழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு உணவளித்து உபசரித்து வருகிறார்.

அப்படி போன ஆண்டும், இந்த ஆண்டுமே நிறைய முறை ரசிகர் சந்திப்பு நடந்து விட்டது.

ஒவ்வொரு மாவட்டத்தின் தலைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவருக்கு பரிச்சயம் ஆகிவிட்டது. தன்பால் பேரன்பு கொண்ட ரசிகர்களுக்கு இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என தனுஷ் நினைக்கிறார்.

இது இப்படியிருக்க, தனுஷ் கொடியை அறிமுகப்படுத்தியது பற்றியும், இது அடுத்த கட்ட அரசியலுக்கான ஆயத்தமா என்று தனுஷின் நெருங்கிய நண்பரும் ரசிகர் மன்றத்தின் முக்கியமானவரும், இயக்குநரருமான சுப்பிரமணிய சிவா அவர்களிடம் பேசினோம்.

சுப்பிரமணிய சிவா
சுப்பிரமணிய சிவா

``தனுஷ் அவர்களுக்கு அரசியல் வரும் எண்ணம் துளியும் கிடையாது. இந்த கொடி எங்கள் ரசிகர் மன்றத்தில் 13 வருடங்களாக இருக்கிறது.

ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள், தனுஷ் - ரசிகர் சந்திப்பு, அவரின் புது படங்கள் ரிலீஸ் ஆகும்போது இந்த கொடியை தான் பல வருடங்களாக உபயோகித்து வருகிறோம்.

இப்போது காரின் முகப்பில் இந்தக் கொடியை சொருகி வைக்கவும், தனுஷ் படத்தின் பின்னணியில் இந்தக் கொடியை வைக்கவும் சட்டென்று சமூக தளத்தில் பிரபலமாகிவிட்டது.

எது எந்த சமயம் சமூக வலைதளத்தில் முன்னுரிமை பெறும் என்பது நாம் அறியவே முடியாத விஷயம் அல்லவா! அப்படி ஆகிவிட்டது அவ்வளவுதான்.

தனுஷ்
தனுஷ்

தனுஷ் அவர்களுக்கு அரசியலில் ஈடுபட கொஞ்சம் கூட ஆர்வமில்லை. அதற்கான வாய்ப்பே கிடையாது. அவருக்காக வரிசையில் படங்கள் காத்திருக்கின்றன.

இதற்கு மேலும் அவர் சில படங்கள் செய்வது பற்றிய ஆலோசனையில் இருக்கிறார். இறுதியாக தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்... தனுஷ் அவர்களிடம் அரசியல் முனைப்பு என்பது இல்லை " என்றார்.

'சினிமா பிடிக்காமலேயே துறைக்கு வந்தவர் தனுஷ்; அழுதுகொண்டேதான் நடிப்பார்' - கஸ்தூரி ராஜா ஷேரிங்ஸ்

'லவ் ஓ லவ்' படத்தின் ப்ரீ - ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, " செல்வராகவன் தான் சினிமா பிடித்து வந்தார். தனுஷிற்கு சி... மேலும் பார்க்க

PR Show: ஒரு கதை, ஒரு படம்; ஆனால் 6 இயக்குநர்கள் - இந்த 'ஆல்ஃபா யூனிட்'டின் ஸ்பெஷல் என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்', 'எல்.ஐ.கே' என நான்கே படங்களில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இப்போ... மேலும் பார்க்க

ரன் ரீரிலீஸ்: "விஜய் சார் 'ரன்' படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - லிங்குசாமி ஷேரிங்

இயக்குநர் லிங்குசாமியின் 'அஞ்சான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீரிலீஸ் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய 'ரன்' படத்தையும் ரீரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்.மாதவன், மீரா ஜாஸ்மி... மேலும் பார்க்க

அருள்வான்: 'ஆரவ்வால் எனக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது'ன்னு நினைச்சேன், ஏன்னா..!' - அருள்நிதி

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திரு... மேலும் பார்க்க

அருள்வான்: "அருள்நிதி ஒரு படத்தில் நடிக்க சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்" - காளி வெங்கட்

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திரு... மேலும் பார்க்க

ரமணா: `இவன் மன்னிப்பை மறுத்தவன்!' | `சினி'ஸ்கோப் 04

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!ரமணா: மன்னிப்பை மறுத்தவன்!`சினி'ஸ்கோப் 04ஓர் இக்கட்டான சூழ்நிலையில் புரொஃபசர் ர... மேலும் பார்க்க