செய்திகள் :

PR Show: ஒரு கதை, ஒரு படம்; ஆனால் 6 இயக்குநர்கள் - இந்த 'ஆல்ஃபா யூனிட்'டின் ஸ்பெஷல் என்ன?

post image

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்', 'எல்.ஐ.கே' என நான்கே படங்களில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இப்போது அவர், 'பி.ஆர்.ஷோ' என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கிவிட்டார்.

PR Show 1 - Pradeep Ranganathan Team
PR Show 1 - Pradeep Ranganathan Team

இதன் முதல் படமாகத் தன்னுடைய கதையை 6 இயக்குநர்கள் ஒன்றாக இணைந்து இயக்கும் படத்தை பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கிறார். இந்த 6 பேரும், 'தி ஆல்ஃபா யூனிட்' என்கிற இப்படத்தை இயக்குகிறார்கள். இந்த 'தி ஆல்ஃபா யூனிட்' யார், அந்த குழு ஏன் ஸ்பெஷல் என்பதை இங்கு பார்ப்போம்.

பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் முதல் படத்தில் மமிதா பைஜூ, அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படத்தை இயக்கும் 6 பேரும், பிரதீப் ரங்கநாதனின் குழுவில் இருந்தவர்கள்தான். யஷ், தனுஷ், விஷால், இளம்பரிதி, நரேந்திரகுமார், சாணக்கியன் ஆகிய 6 பேர்தான் இப்படத்தை இயக்குகிறார்கள்.

இவர்களில் யஷ் என்பவர் ஏற்கெனவே மக்களுக்குப் பரிச்சயம்தான். 'டியூட்' படத்தின் ஹைதராபாத் பிரஸ் மீட்டில், பிரதீப் ரங்கநாதன் தமிழில் பேச, அதனைத் தெலுங்கில் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்லிச் சமூக வலைதளங்களில் வைரலான அவரைப் பலருக்கும் நினைவிருக்கலாம். அவரும் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.

அவரைத் தொடர்ந்து 'டிராகன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாணக்கியன் என்பவரும் இப்படத்தை இயக்குகிறார். இவர்கள் உட்பட இன்னும் நால்வர் இப்படத்தை இயக்குகிறார்கள்.

இதற்கு முன் 2 இயக்குநர்கள் காம்போவாகச் சேர்ந்து ஒரு படத்தை இயக்குவது என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்துச் சினிமாக்களிலும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இரண்டிற்கும் மேற்பட்ட இயக்குநர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தை இயக்குவது இதுவே முதன் முறை.

Pradeep Ranganathan Assistant Director
Pradeep Ranganathan Assistant Director

தமிழில் வெளிவந்த 'சுயம்வரம்' படத்தை மொத்தமாக 14 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கியிருக்கிறார்கள்தான். ஆனால், இப்படத்தின் ஒவ்வொரு பகுதிகளை இந்த 14 இயக்குநர்கள் டைரக்ட் செய்து, ஒரே நாளில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள்.

அதேபோல, பாலிவுட்டில் வெளிவந்த 'எக்ஸ்: பாஸ்ட் இஸ் பிரசண்ட்' படத்தையும் மொத்தமாக 11 இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். அப்படத்தின் கதையின் ஒவ்வொரு பகுதிகளை இந்த 11 இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். ஆனால், ஒரே படத்தை மொத்தமாக 6 பேர் இணைந்து டைரக்ட் செய்வது இதுவே முதல் முறை. அதுதான் இந்த ஆல்ஃபா யூனிட்டின் ஸ்பெஷல்!

ரன் ரீரிலீஸ்: "விஜய் சார் 'ரன்' படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - லிங்குசாமி ஷேரிங்

இயக்குநர் லிங்குசாமியின் 'அஞ்சான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீரிலீஸ் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய 'ரன்' படத்தையும் ரீரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்.மாதவன், மீரா ஜாஸ்மி... மேலும் பார்க்க

அருள்வான்: 'ஆரவ்வால் எனக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது'ன்னு நினைச்சேன், ஏன்னா..!' - அருள்நிதி

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திரு... மேலும் பார்க்க

அருள்வான்: "அருள்நிதி ஒரு படத்தில் நடிக்க சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்" - காளி வெங்கட்

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திரு... மேலும் பார்க்க

ரமணா: `இவன் மன்னிப்பை மறுத்தவன்!' | `சினி'ஸ்கோப் 04

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!ரமணா: மன்னிப்பை மறுத்தவன்!`சினி'ஸ்கோப் 04ஓர் இக்கட்டான சூழ்நிலையில் புரொஃபசர் ர... மேலும் பார்க்க

Ravi Mohan: "என்னைப் பற்றி 3 வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்..." - பகிரும் ரவி மோகன்

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரவிமோகன் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவாரஸ்யமா... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: `அரசியலா மாத்தாதீங்க!' - ரெட் ஜெயன்ட் மூவீஸ் குறித்து விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் 'கட்டா குஸ்தி 2' படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்று சென்னையில் ரோட்டரி கிளப், சிறப்புக... மேலும் பார்க்க