செய்திகள் :

'சினிமா பிடிக்காமலேயே துறைக்கு வந்தவர் தனுஷ்; அழுதுகொண்டேதான் நடிப்பார்' - கஸ்தூரி ராஜா ஷேரிங்ஸ்

post image

'லவ் ஓ லவ்' படத்தின் ப்ரீ - ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, " செல்வராகவன் தான் சினிமா பிடித்து வந்தார். தனுஷிற்கு சினிமா பிடிக்காது.

5, 6 படங்கள் நடிக்கும் வரைக்கும் அவருக்கு சினிமா பிடிக்காது. என்னை விட்டுவிடுங்கள் நான் போய்விடுகிறேன் என்று தான் சொல்லுவார். 'துள்ளுவதோ இளமை' படத்தின்போதெல்லாம் அழுதுகொண்டே தான் வந்து நடிப்பார்.

கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா

சினிமாவுக்கு நம் பிள்ளைகள் யாருமே வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அதனால் ப்ரிவியூ ஷோவிற்கு கூட கூட்டிக்கொண்டு செல்லமாட்டேன். செல்வராகவன் படிப்பாளி.

ஒரு நாள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது 'இனிமேல் நான் படிக்க மாட்டேன்' என்று சொன்னார். நான் சொன்னேன் சினிமா எனக்கு முன்னாடியும் இருந்தது. என்னுடைய காலத்திலும் இருந்தது. எனக்கு பிறகும் இருக்கும். ஆனால் டிகிரி அப்படி இல்லை.

நீ முதலில் டிகிரி வாங்கிட்டு வா என்றேன். செல்வராகன் படித்தார். நல்ல மதிப்பெண் எடுத்தார். அமெரிக்காவிற்கு படிக்க வைக்க அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் 'நான் நீங்கள் சொன்ன மாதிரி படித்து முடித்துவிட்டேன் , சினிமாவில் சேர்த்துவிடுங்கள்' என்றார். நான் நிறைய இயக்குநரிடம் கேட்டேன்.

கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா

அவர்கள் உங்கள் மகனை எப்படி நாங்கள் சேர்த்துகொள்ள முடியும். நாங்கள் உதவி இயக்குநர்களை எல்லாம் திட்டுவோம் என்றனர். பிறகு பாலசந்தர் சாரிடம் சேர்த்துவிட்டேன். அதன் பிறகு 'காதல் கொண்டேன்', 'துள்ளுவதோ இளமை' படங்களை எடுத்தார்" என்று பேசியிருக்கிறார்.

PR Show: ஒரு கதை, ஒரு படம்; ஆனால் 6 இயக்குநர்கள் - இந்த 'ஆல்ஃபா யூனிட்'டின் ஸ்பெஷல் என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்', 'எல்.ஐ.கே' என நான்கே படங்களில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இப்போ... மேலும் பார்க்க

ரன் ரீரிலீஸ்: "விஜய் சார் 'ரன்' படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - லிங்குசாமி ஷேரிங்

இயக்குநர் லிங்குசாமியின் 'அஞ்சான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீரிலீஸ் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய 'ரன்' படத்தையும் ரீரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்.மாதவன், மீரா ஜாஸ்மி... மேலும் பார்க்க

அருள்வான்: 'ஆரவ்வால் எனக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது'ன்னு நினைச்சேன், ஏன்னா..!' - அருள்நிதி

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திரு... மேலும் பார்க்க

அருள்வான்: "அருள்நிதி ஒரு படத்தில் நடிக்க சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்" - காளி வெங்கட்

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திரு... மேலும் பார்க்க

ரமணா: `இவன் மன்னிப்பை மறுத்தவன்!' | `சினி'ஸ்கோப் 04

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!ரமணா: மன்னிப்பை மறுத்தவன்!`சினி'ஸ்கோப் 04ஓர் இக்கட்டான சூழ்நிலையில் புரொஃபசர் ர... மேலும் பார்க்க

Ravi Mohan: "என்னைப் பற்றி 3 வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்..." - பகிரும் ரவி மோகன்

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரவிமோகன் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவாரஸ்யமா... மேலும் பார்க்க