செய்திகள் :

`தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதை பார்ப்பது..'- விஜய்யைச் சந்தித்த அதர்வா, கவின்

post image

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், நடிகர் அதர்வா மரியாதை நிமித்தமாக தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யை சந்தித்திருக்கிறார்.

அது தொடர்பாக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த பெருமையும், உன்னதமான மகிழ்ச்சியும் ஆகும். என்னைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் நம் சொந்த "விஜய் அண்ணா" தான். முக்கியமான நாளுக்கு (BIG DAY) சற்று முன்பாக, அவருடைய அன்பையும் ஆசிகளையும் பெற்றது எனக்கு உலகமே கிடைத்தது போன்ற உணர்வைத் தருகிறது. மிக்க நன்றி, அண்ணா!

இதைச் சாத்தியமாக்கிய (முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளரான) ஜெகதீஷ் பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உண்மையிலேயே பணிவன்புடனும், நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். மனநிறைவோடு, மிகுந்த நேர்மறை ஆற்றலை உணர்கிறேன்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் அதர்வாவைப் போல நடிகர் கவினும் முதல்வரைச் சந்தித்திருக்கிறார். அது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``சில மனிதர்கள், தங்களின் இயல்பான குணத்தாலேயே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். காலம் அவரது பயணத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் அவரது எளிமையையும், பணிவையும், கனிவையும் அது ஒருபோதும் மாற்றியதில்லை.

லட்சக்கணக்கானோரைப் போலவே நானும் அவரைப் பெரிய திரையில் பார்த்து வளர்ந்தவன். இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதைப் பார்ப்பது, தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பெருங்கதை.

என் வாழ்நாளின் மிகச்சிறந்த பொக்கிஷமான தருணம் இது. இத்தனை ஆண்டுக்கால என் ஆசையை நிறைவேற்றி வைத்த (முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளரான) ஜெகதீஷ் பழனிசாமி அண்ணாவுக்கு மிக்க நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு 'A' சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆன... மேலும் பார்க்க

Shah Rukh Khan: `கணவரை விட உங்களை நேசிக்கிறேன்!’ - ரசிகையின் பேச்சு; பக்குவமாக பதிலளித்த ஷாருக் கான்

திரைப்பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வழக்கம். அப்படி வரும் எதிர்பாராத கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் பிரபலங்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள் என... மேலும் பார்க்க

Jana Nayagan: ஜனநாயகன் ஜூலை ரிலீஸ்: `முதல்வர்’ விஜய் படத்தின் தணிக்கைச் சிக்கல் முடிவுக்கு வந்தது!

முன்னணி நடிகராக இருந்து தற்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஜனநாயகன்'. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல... மேலும் பார்க்க

குருவைத் தொடர்ந்து சீடன்; தூறல் நின்னு போச்சு! - தமிழ் சினிமாவின் இரட்டைப் பேரிழப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவர் மனித மனங்களை இயக்கினார்!- பாக்யராஜ் என்ற மனித இயல்பின் மொழிபெயர்ப்பாளர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கே.பாக்யராஜ்: கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு; மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி!

தமிழ்த் திரையுலகில் `திரைக்கதை மன்னன்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் கே.பாக்யராஜ். 1980-களில் தமிழ் சினிமாவின் வணிக சமன்பாடுகளையும், கதை சொல்லும் பாணியையும் மு... மேலும் பார்க்க