செய்திகள் :

திருப்பூர்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட டேங்கர் லாரி - கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

post image

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு, பல்லடத்திலிருந்து ஊத்துக்குளி வழியாக சேலம் சாமிநாதபுரத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊத்துக்குளி அருகில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

வாகன விபத்து

டேங்கர் லாரி மோதிய வேகத்தில் கார் முற்றிலும் சிதைந்து நொறுங்கியது. இந்தக் கொடூர விபத்தில் காரில் பயணித்த கணவர் முகிலன், ஈஸ்வரன், திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகிய 6 பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹேமாவை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.‌ லாரி‌ ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிய‌ நிலையில், ஊத்துக்குளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

மகாராஷ்டிரா முழுக்க தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒடிந்து விழுந்து வருகிறது. மின்வயர்களும் அறுந்து விழுந்து வருகிறது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள காம்க... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக மேப்... மேலும் பார்க்க

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்; கேரளாவில் மீண்டும் சோகம்

கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனக்கம்பொயில் - மேப்பாடி' சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன. மலப்புறம் மற்றும் வயநாடு இடையே... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: நெல் மூட்டைகள் சரிந்து பெண் பணியாளர் பலியான சோகம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள... மேலும் பார்க்க

திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழி... மேலும் பார்க்க

லாரி மீது பஸ் மோதி விபத்து; தீப்பிடித்தில் 7 பேர் பலி; பஸ்ஸில் சிகரெட் ஏற்றிச்சென்றதுதான் காரணமா?

மும்பை-டெல்லி இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் முடிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தச் சாலையில்... மேலும் பார்க்க