செய்திகள் :

`அடிமையாக்கும்’ வகையில் வடிவமைப்பு'- இன்ஸ்டா, பேஸ்புக்குக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

post image

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் பயனர்களை தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) குற்றம் சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த விசாரணையின் ஆரம்பகட்ட முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. அதில், மெட்டா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 'டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை' (DSA) மீறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகள் பயனர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு ஏற்படுத்தும் அபாயங்களை மெட்டா நிறுவனம் சரியாக மதிப்பீடு செய்யத் தவறிவிட்டது. சமூக ஊடகப் பயன்பாடு இளைஞர்களின் மனநலனைப் பாதித்து, பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன.

மெட்டா: சமூகவலைதள அடிமை
மெட்டா: சமூகவலைதள அடிமை

இதன் காரணமாகவே, சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, தானாகவே இயங்கும் வீடியோக்கள் (Autoplay videos), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் (Personalised recommendations) மற்றும் எல்லையே இல்லாத 'இன்ஃபினிட் ஸ்க்ரோலிங்' (Infinite scrolling) போன்ற அம்சங்கள் பயனர்களின் மூளையை ஒருவித ‘சுயஇயக்க நிலைக்கு’ (Autopilot mode) தள்ளுகிறது.

இது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களுக்கும், செயலிகளுக்கு அடிமையாவதற்கும் வழிவகுக்கிறது என்பதால், இந்த ‘அடிமையாக்கும் முக்கிய அம்சங்களை’ மெட்டா நிறுவனம் உடனடியாக முடக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்க, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகளின் Default settings மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தனது தொழில்நுட்ப விதிகளை மெட்டா நிறுவனம் தொடர்ந்து மீறினால், அதற்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். பயனர்களின் ‘கட்டாயப் பயன்பாட்டை’ கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக, தங்களது செயலிகளின் வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

மெட்டா: சமூகவலைதள அடிமை
மெட்டா: சமூகவலைதள அடிமை

அதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பென் வால்டர்ஸ், ``ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஆரம்பகட்ட விசாரணை முடிவுகளை திட்டவட்டமாக மறுக்கிறோம். பதின்ம வயது இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக எங்களது நிறுவனம் ஏற்கனவே பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை முடிவுகள் எங்களது பாதுகாப்பு முயற்சிகளைத் துல்லியமாகக் கணக்கில் கொள்ளவில்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளிக்க மெட்டா நிறுவனத்திற்கு இன்னும் சில மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். ஒருவேளை மெட்டா நிறுவனத்தின் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அந்த நிறுவனத்தின் உலகளாவிய வருடாந்திர வருவாயில் 6 சதவீதம் வரை அபராதமாக விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டு யானைக்குக் கண்ணீர் அஞ்சலி: வயநாட்டை நெகிழ வைத்த 'லட்சுமி'யின் மரணம்

கேரளாவின் வனப்பகுதிகளில் மனித-விலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், வயநாடு காட்டு எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் மனிதநேயத்திற்கும், விலங்கினப் பாசத்திற்கும்... மேலும் பார்க்க

நெரிசலில் தவித்த உயிர்... ஓடும் பேருந்திலிருந்து குதித்து காப்பாற்றிய தேவதைகளின் நெகிழ்ச்சி சம்பவம்!

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது நமக்கு எரிச்சலையும் தாமதத்தையுமே தந்து பழகியிருக்கிறது. ஆனால், அதே நெரிசலில் ஒரு மனிதனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு செவிலியர்கள் காட்டிய அசாத்திய துண... மேலும் பார்க்க

மதுரை: காதல் கோட்டை க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்; ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டான ரயில் நிலையம்!

மதுரை ரயில்வே நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில... மேலும் பார்க்க

MTC பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு; துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர்; சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் ஓடும் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான சுவாரசியமான, நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் கிளாம்பாக்கம் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந... மேலும் பார்க்க

Madhavan: `10 வாட்ச் மட்டுமே தயாரிப்பு; விலை.? - நடிகர் மாதவன் கட்டியிருந்த அரிதான வாட்ச்!

இந்திய திரையுலகின் முன்னணி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவரான மாதவனுக்கு, நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி நடந்த இந்த நிகழ்வில... மேலும் பார்க்க

Larry Cat: 7-வது பிரதமருக்காகக் காத்திருக்கும் இங்கிலாந்துப் பூனை; சமூக ஊடகங்களில் வைரலாகும் லேர்ரி!

பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். 7-வது பிரதமர... மேலும் பார்க்க