செய்திகள் :

Larry Cat: 7-வது பிரதமருக்காகக் காத்திருக்கும் இங்கிலாந்துப் பூனை; சமூக ஊடகங்களில் வைரலாகும் லேர்ரி!

post image

பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். 7-வது பிரதமருக்காக லண்டன் 10 டவுனிங் தெருவில் இருக்கும் பிரதமர் இல்லம் காத்திருக்கிறது. அந்த வீட்டில் வாசலில் 7-வது பிரதமரைப் பார்க்க ஒரு பூனையும் காத்திருக்கிறது.

10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வசித்து வரும் சாம்பல் மற்றும் வெள்ளை நிற வரிகளைக் கொண்ட லேர்ரி பூனை, பல ஆண்டுகளாக பிரிட்டன் அரசியலின் மிக முக்கிய அங்கமாகவும், உலகளவில் அடையாளம் காணப்பட்ட ஒரு சின்னமாகவும் மாறியுள்ளது.

லேர்ரி பூனை
லேர்ரி பூனை

பிரிட்டனின் புகழ்பெற்ற 'பாட்டர்சி நாய் மற்றும் பூனைகள் காப்பகத்தில்' (Battersea Dogs & Cats Home) இருந்து கடந்த 2011-ம் ஆண்டு மீட்கப்பட்டு, எலிகளைப் பிடிக்க டவுனிங் ஸ்ட்ரீட் பிரதமர் இல்லத்திற்குள் அழைத்து வரப்பட்டது லேர்ரி பூனை.

அன்று முதல் இன்று வரை டேவிட் கேமரூன், தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக், தற்போது கீர் ஸ்டார்மர் உட்பட ஆறு பிரிட்டிஷ் பிரதமர்களின் ஆட்சிப் காலத்தைக் கடந்து, அங்கு ஒரு நிரந்தர அரசியல் அங்கமாகவே இப்போதும் அந்தப் பூனை அங்கேயே இருக்கிறது.

உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பிரதமர் இல்லத்திற்கு வரும் முக்கியப் பிரமுகர்களுடன் அடிக்கடி புகைப்படங்களில் தோன்றும் லேர்ரி பூனை, இப்போதும் பிரிட்டன் அரசியல் மாற்றத்தின் ஒரு மௌன சாட்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தப் பூனையின் பெயரில் இயங்கும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கம், ``கீர் ஸ்டார்மரின் ராஜினாமாவை தலைமைப் பணியாளராக நான் ஏற்றுக்கொண்டேன்" என்றும், அடுத்த பிரதமருக்கான பந்தயத்தில் இருக்கும் ஆண்ட்ரூ பர்ன்ஹமைச் சுட்டிக்காட்டி நையாண்டியாகவும் பதிவிட்டுள்ளது.

பிரிட்டன் அரசியலின் நிலையற்ற தன்மையைக் காட்டும் விதமாக, பதவிக் காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்த 5 பிரதமர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியடைந்த ரிஷி சுனக் ஆகியோரின் புகைப்படங்களைப் பகிர்ந்து, "அடுத்த விக்கெட்டும் சரிந்தது" என்று அந்த சமூக ஊடகப் பக்கத்தில் நகைச்சுவையாகப் பதிவிடப்பட்டுள்ளது.

`சிவனைப் தரிசிக்க வேண்டும்" - ஆண்டு கணக்கில் நின்றுகொண்டே இருக்கும் சாமியார் | Viral Video

இந்தியாவைச் சேர்ந்த துலால் கிரி ஜி மகாராஜ் என்ற இந்து சாமியார் ஒருவர், தனது ஆன்மீக நேர்த்திக்கடனுக்காகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நின்றுகொண்டே இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெள... மேலும் பார்க்க

நூறு சாமி: ``இக்கட்டான சூழ்நிலைகளில்..."- திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இசையமைப்பாளர், படத் தயாரிப்பாளர் எனப் பல முகங்களுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படம் இன்று (ஜூன் 19) திரையரங... மேலும் பார்க்க

கும்பகோணம் தீ விபத்தின் கோரத்தை நேரில் கண்டவர், இன்று மதிப்புமிக்க பதவியில்- வாழ்த்திய ராதாகிருஷ்ணன்

2004-ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளித் தீ விபத்தின்போது, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஜெனிபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஆனால், இந்த விபத்தில் 94 க... மேலும் பார்க்க

`சிங்கிள் பெட்ரூம் வீடு; அதுவும் சொந்தமில்லை' - டிரில்லியனரான எலான் மஸ்க்கின் சுவாரஸ்யப் பக்கம்!

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX) நிறுவனத்தின் பிரமாண்ட பங்குச் சந்தை அறிமுகத்தைத் (IPO) தொடர்ந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல் 'டிரில்லியன் அதிபர்' (Trillionaire) என்ற வரலா... மேலும் பார்க்க

"இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதா?" - லண்டனில் தலைமை நீதிபதியிடம் கேள்வி!

லண்டனில் உள்ள பிர்க்பெக் (Birkbeck) கல்லூரியில், கடந்த ஜூன் 4-ம் தேதி இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். உரைக்குப் பிந்... மேலும் பார்க்க

Ajith Kumar: ``கனத்த இதயத்துடன்..." - கார் பந்தயத்திற்குத் திரும்பிய அஜித் குமார் பதிவு வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக 'அஜித் குமார் ரேஸிங்' (Ajith Kumar Racing) என்ற சொந்த அணியை உர... மேலும் பார்க்க