இந்தியா கூட்டணி: ``காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது" - திமுக ...
Ajith Kumar: ``கனத்த இதயத்துடன்..." - கார் பந்தயத்திற்குத் திரும்பிய அஜித் குமார் பதிவு வைரல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக 'அஜித் குமார் ரேஸிங்' (Ajith Kumar Racing) என்ற சொந்த அணியை உருவாக்கி, உலகத்தரம் வாய்ந்த போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் இவரது அணி 2-வது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி அஜித் வெற்றிக் கோப்பையை வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, சென்னையில் வசித்து வந்த நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (84), கடந்த சில தினங்களுக்கு முன்பு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு துபாயில் இருந்து உடனடியாகச் சென்னை விரைந்தார் அஜித் குமார்.




அவரது தாயாரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தின் போது தனது தாயின் உடலை நடிகர் அஜித் குமார் தோலில் சுமந்து சென்று இறுதிச்சடங்குகளை கண்ணீருடன் நிறைவேற்றினார்.
தாயை இழந்த சோகத்தில் இருந்தாலும், தனது கடமைகளிலிருந்து பின்வாங்காமல் அஜித் குமார் மீண்டும் கார் பந்தய களத்திற்குத் திரும்பியுள்ளார். இது குறித்து அவரது அதிகாரப்பூர்வ 'அஜித் குமார் ரேஸிங்' எக்ஸ் பக்கத்தில், ``கனத்த இதயத்துடன் மீண்டும் எனது வேலைக்குத் திரும்பியிருக்கிறேன், ஆனால் வாழ்க்கை நிச்சயம் தொடர வேண்டும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார். சோகத்திலும் அஜித்தின் இந்த அசாத்திய மனஉறுதியும், கடமை உணர்ச்சியும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது.














