செய்திகள் :

திருச்சி: மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இருவர் - போலீஸ் தீவிர விசாரணை

post image

திருச்சி, பொன் நகர் புது செல்வா நகரைச் சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது: 37). இவர், கடந்த 17 -ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு, அவரது உடமைகளை குடியேற்ற பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தபோது, அவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தியது தெரியவந்தது. மேலும், அவர் வெளிநாட்டில் குடியுரிமை வைத்துள்ளவர் என்பதும் தெரிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து, சென்னை பெருநகர போலீஸார் வழக்கு பதியவில்லை. இது சம்பந்தமாக திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் சால்மன் பார்ஷ் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

இதே போல், திருச்சி தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனி வைத்தீஸ்வரன் (வயது: 59). இவர், கடந்த பத்தாம் தேதி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு குடியேற்ற பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ளதும், அவர் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தனது வாக்கை செலுத்தியதும் தெரியவந்தது. இது குறித்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் திருச்சி தில்லை நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மேற்கு தொகுதியில் நடந்து முடித்த சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இருவர் வாக்களித்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் மீறிய உறவு; வீட்டுக்குள் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (60). சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்தார். இவர் மனைவி அமுதா (50). இவர்களது மகன் சிவராஜ், மகள் சிவரஞ்சனி. இருவருக்கும் ... மேலும் பார்க்க

நெல்லை: மது போதையில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற மகன்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (வயது 43). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.அவரின் மனைவி கல்யாண... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை? டிரைவரைத் தாக்கிய உறவினர்கள்! - என்ன நடந்தது?

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவருடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அபோது, அந்தப் பகுதியில் அவருடைய தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத... மேலும் பார்க்க

"இயற்கை உரம் போட்டு வளர்த்தேன்"- வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து சட்னி செய்து சாப்பிட்ட ஐடி மேலாளர்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் 'டெக்னோபார்க்' வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். ஐடி கம்பெனி மேலாளராகப் பதவி வகிக்கும் அவர்... மேலும் பார்க்க

கேரளம்: ஆண் நண்பருடன் சென்று வந்த மனைவியை கொலைசெய்த கணவன் - சோகத்தில் முடிந்த காதல் திருமணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனா(38). வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திரும... மேலும் பார்க்க

91 காயங்களுடன் சிதைந்த பிஞ்சு உடல்: கேரளாவை உலுக்கிய படுகொலை - தாயின் காதலன் வெறிச்செயல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை, தாயின் காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்ததாக பிரேத... மேலும் பார்க்க