செய்திகள் :

`என்ன ஜெயிக்க வெச்சதுக்கு நன்றி'- `அமைச்சரே இது உங்க தொகுதி இல்ல' வைரலான ஸ்ரீநாத் வீடியோ; ADMK சாடல்

post image

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்து த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகர் ஸ்ரீநாத். தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த மே, 30-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார் ஸ்ரீநாத். பின்னர், திருச்செந்தூர் அருகிலுள்ள அமலிநகர், மணப்பாடு, வீரபாண்டியன்பட்டிணம், ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் அருகிலுள்ள புன்னக்காயல் பகுதிக்குச் சென்றார்.

ஸ்ரீநாத்

திறந்த வேனில் நின்று, “எல்லாருக்கும் வணக்கம், வணக்கம், வணக்கம். புன்னக்காயல் மக்களே ஐ லவ் யூ. ஐ லவ் யூ. உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி. அதிக வாக்குகள் வித்யாசத்தில் என்னை ஜெயிக்க வச்ச உங்களுக்கும், நம்ம மக்களுக்கும் ரொம்ப நன்றி.” எனப் பேசினார். ”இது திருச்செந்தூர் தொகுதி அமைச்சரே” எனக் கூட்டத்தில் ஒருவர் உரக்கச் சொல்ல... மைக்கினை அருகில் உள்ள த.வெ.க நிர்வாகி ஒருவரிடம் கொடுத்துவிட்டு சிரித்தபடியே கையசைத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

தனது சொந்த தொகுதி எது? தொகுதிக்குட்பட்ட எல்லைகள் எது? எந்தெந்த ஊர்கள் தொகுதிக்குள் வரும் என்பதுகூட தெரியாமல் அமைச்சர் இருக்கிறாரே என எதிர்கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர். அத்துடன் ஸ்ரீநாத் தொகுதி மாறி நன்றி தெரிவித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அதிமுக ஐ.டி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக்கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

ஸ்ரீநாத்

தனது தொகுதி எல்லை எது என்றுகூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' - முன்னாள் அமைச்சர் மூர்த்தி

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று முன்னாள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கியும் நலிவடைந்த குடும்ப பெ... மேலும் பார்க்க

சரிவை நோக்கி நகர்கிறதா 'வங்காளப் புலி' மம்தாவின் இரும்புக்கோட்டை? - உட்கட்சி எரிமலை வெடித்தது எங்கே?

இந்திய அரசியலின் தற்போதைய மிக உற்றுநோக்கப்படும் 'ஹாட் டாபிக்' எதுவென்றால், அது மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. அண்மைய... மேலும் பார்க்க

`உண்மைதான், ஆயிரம் முறை சொல்வேன்... உதயசூரியனில் போட்டியிட்டது துரதிஷ்டம் தான்' - துரை வைகோ

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் தொலைந்தது தொ... மேலும் பார்க்க

ஆரத்தழுவிய சித்தராமையா; எமோஷனலான டி.கே.சிவகுமார்... பதவியேற்பு விழா Photo Album

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பதவி ஏற்புகர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பதவி ஏற்புகர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பதவி ஏற்புகர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பதவி ஏற்புகர்நாடக முதலமைச்... மேலும் பார்க்க

'Small Cap பங்குகள் தொடர்ந்து நன்கு Perform செய்யுதே!' அது முதலீட்டாளர்களுக்கு நல்ல சாய்ஸா?

வெளியாகி முடிந்த காலாண்டு முடிவுகளில், பல ஸ்மால் கேப் நிறுவனங்கள் நல்ல முடிவுகளைத் தந்துள்ளது. இதனால், 'ஸ்மால் கேப் பங்குகள் தொடர்ந்து நன்கு பெர்ஃபார்ம் செய்து வருகிறதே... அதில் முதலீடு செய்யலாமா?' என... மேலும் பார்க்க

`அறிவாலயம் வரும் சிறுத்தைகள்; திமுக க்ரீன் சிக்னல் டு எடப்பாடி Vs வேலுமணி - தொடரும் மோதல்! | கழுகார்

தூய ஆட்சியில் தீய அதிகாரி!''மாதம் 20 லட்டுக்கள் தரணும்...'தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் வெற்றியை குறிக்கும் பெயருடைய பெண் அதிகாரியின் வசூல் வேட்டையை கேட்டு உயரதிகாரிகளே ஷாக்காகி இரு... மேலும் பார்க்க