செய்திகள் :

'ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் சந்தித்துக் கொண்டதை யாரும் விவாதிக்கவில்லை, ஆனால்.!'- திருமா கூறியதென்ன?

post image

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட திருமாவளவன் 'பாஜக எதிர்ப்பில் திமுக, தவெக இணைவதில் என்ன தவறு இருக்கிறது' என்று பேசியிருக்கிறார்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், " சனாதனத்தை பேசும் திருமாவளவன் கோவிலுக்கு எதற்கு செல்கிறார் என கேட்கிறார்கள். திருமாவளவன் என்கின்ற தலைமைத்துவத்தை தமிழகத்தில் சிதைக்க வேண்டும் என காழ்ப்புணர்ச்சியோடு சிலர் பேசுகிறார்கள்.

தேர்தலில் ஜெயித்தவர்கள் தோற்றவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொண்டதை பற்றி யாரும் விவாதம் நடத்தவில்லை. ஆனால் திருமாவளவன் திமுகவுடன் சென்றால் மட்டும் பேசுகிறார்கள்.

ஸ்டாலினை சந்தித்த விஜய்
ஸ்டாலினை சந்தித்த விஜய்

தனிப்பட்ட முறையில் பாஜக மீது எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் கருத்தியல் என்பது வேறு. திமுகவுக்கும், தவெகவுக்கும் ஒரே எதிரி பாஜக தான். பாஜக எதிர்ப்பில் திமுக, தவெக இணைவதில் என்ன தவறு இருக்கிறது.

கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரஸும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது?" என்று பேசியிருக்கிறார்.

'அமித் ஷா, அஷ்வினி வைஷ்ணவ்வும் எனக்கு வாழ்த்து சொன்னங்க; தனிப்பட்ட முறையில் பாஜக மீது.!'- திருமா

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் பாஜக குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், " ... மேலும் பார்க்க

பள்ளியில் தவெக நிகழ்ச்சி: `அதிலென்ன இருக்கு... இது ஒன்னும் புதுசு இல்லை' - அமைச்சர் விஸ்வநாதன்

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட த.வெ.க நிகழ்ச்சி, அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமானது. பல்வேறு கல்வி ஆர்வலார்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள... மேலும் பார்க்க

``ஒரிஜினல் களவாணி முதல்வர் விஜய்தான்: திமுக - அதிமுக கூட்டனி?" - டிடிவி தினகரன் `பளிச்' பதில்கள்!

தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தங்களது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்திலேயே இயங்கி வருவதாக அ ம.மு.க தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்திருக்கிறார். மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

'Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்'னு சொன்ன நீங்க ஏன்..?'- ராஜ்மோகனை சாடிய நயினார் நாகேந்திரன்

'அனைவருக்குமான ஆட்சி' என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பள்ளி கல்வித்துறை அமைச... மேலும் பார்க்க

"அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அந்தந்த மா... மேலும் பார்க்க

வெளிமாநிலங்களுக்கு எம்-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கலாம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

எம்- சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் கட்டுமானப் ... மேலும் பார்க்க