செய்திகள் :

``ஒரிஜினல் களவாணி முதல்வர் விஜய்தான்: திமுக - அதிமுக கூட்டனி?" - டிடிவி தினகரன் `பளிச்' பதில்கள்!

post image

தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தங்களது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்திலேயே இயங்கி வருவதாக அ ம.மு.க தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்திருக்கிறார். மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `` முதலமைச்சர் இன்னும் ஒரு சினிமா நடிகராகவே பொதுவெளியில் உலா வருகிறாரே தவிர, தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. அவரது மேடைப் பேச்சுகள், உடல்மொழிகள் மற்றும் திருச்சி, கரூர் கூட்டங்களில் அவர் காட்டிய பாவனைகள் அனைத்தும் ஏதோ ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் டயலாக் பேசுவது போன்றே பொதுமக்களுக்கு ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

திரைப்படப் பிரபலத்தை வைத்து, மாற்று ஆட்சி என்ற எண்ணத்தில் மக்கள் அளித்த வாக்குகளைக் கொண்டு, தி.மு.க கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுத்து, அமைச்சர் பதவி கொடுத்து இந்த ஆட்சி தக்கவைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ஆசைவார்த்தை காட்டி, சதி செய்து ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஒரு மிகப்பெரிய அரசியல் ஊழல் மட்டுமல்ல ஜனநாயக படுகொலை. மற்றவர்களை 'களவாணி' என்று விமர்சிக்கும் முதலமைச்சர்தான், உண்மையில் பிற கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தூக்கிய ஒரிஜினல் களவாணி.

விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றிய இந்த அரசுக்கு எதிராகப் போராடி, உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்காமல், தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே அரசு பணிகளை வாரி வழங்குவது தவறான முன்னுதாரணம்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எதிர்காலத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இணைந்து இந்த அரசை எதிர்க்கக் கூடுமா என்ற கேள்விக்கு, அரசியலில் சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கும். கடந்த காலத்தில் பேரறிஞர் அண்ணாவும் ராஜாஜியும் கூட இணைந்து செயல்பட்டுள்ளனர். வைகோ இப்போதைய முதலமைச்சருக்கு மட்டுமல்ல, அவர் கடந்த காலத்தில் கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் எனப் பலருக்கும் கவசமாக இருந்தவர். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் தற்போதைய முதலமைச்சரை ஒப்பிட வேண்டாம். விஜயகாந்த் பொதுவெளியில் எதார்த்தமாக வாழ்ந்தவர், ஆனால் தற்போதைய முதலமைச்சர் பொதுவெளியிலும் சினிமா பாணியிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.

"1987 வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 25 பேரின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்”- அன்புமணி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணையை நேற்று(ஜுலை.10) முதல்வர் விஜய் வழங்கியிருந்தார். இந்நிலையில் “வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் பார்க்க

'அமித் ஷா, அஷ்வினி வைஷ்ணவ்வும் எனக்கு வாழ்த்து சொன்னங்க; தனிப்பட்ட முறையில் பாஜக மீது.!'- திருமா

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் பாஜக குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், " ... மேலும் பார்க்க

பள்ளியில் தவெக நிகழ்ச்சி: `அதிலென்ன இருக்கு... இது ஒன்னும் புதுசு இல்லை' - அமைச்சர் விஸ்வநாதன்

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட த.வெ.க நிகழ்ச்சி, அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமானது. பல்வேறு கல்வி ஆர்வலார்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள... மேலும் பார்க்க

'Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்'னு சொன்ன நீங்க ஏன்..?'- ராஜ்மோகனை சாடிய நயினார் நாகேந்திரன்

'அனைவருக்குமான ஆட்சி' என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பள்ளி கல்வித்துறை அமைச... மேலும் பார்க்க

'ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் சந்தித்துக் கொண்டதை யாரும் விவாதிக்கவில்லை, ஆனால்.!'- திருமா கூறியதென்ன?

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் 'பாஜக எதிர்ப்பில் திமுக, தவெக இணைவதில் என்ன தவறு இருக்கிறது' என்று பேசியிருக்கிறார். விசிக தலை... மேலும் பார்க்க

"அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அந்தந்த மா... மேலும் பார்க்க