செய்திகள் :

"அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

post image

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி, அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அந்தந்த மாநிலங்களின் மாநிலப் பாடலுக்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்

அதனைத் தொடர்ந்து, நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் நிறைவாக, இறுதிப் பகுதியாக தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேசியப் பாடல், தேசிய கீதத்தை பாடும்போது அதன் அசல் வரிகள், சரியான உச்சரிப்பு முறைகளை துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா
இந்தியா

இந்த புதிய வரிசை முறையை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் மத்திய அமைச்சகங்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் தவறாமல் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

'Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்'னு சொன்ன நீங்க ஏன்..?'- ராஜ்மோகனை சாடிய நயினார் நாகேந்திரன்

'அனைவருக்குமான ஆட்சி' என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பள்ளி கல்வித்துறை அமைச... மேலும் பார்க்க

'ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் சந்தித்துக் கொண்டதை யாரும் விவாதிக்கவில்லை, ஆனால்.!'- திருமா கூறியதென்ன?

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் 'பாஜக எதிர்ப்பில் திமுக, தவெக இணைவதில் என்ன தவறு இருக்கிறது' என்று பேசியிருக்கிறார். விசிக தலை... மேலும் பார்க்க

வெளிமாநிலங்களுக்கு எம்-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கலாம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

எம்- சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் கட்டுமானப் ... மேலும் பார்க்க

'It's over' - ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் - மீண்டும் போர் தொடக்கமா?

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ, அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டன... மேலும் பார்க்க

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"- ஆளுநர் அர்லேகர் பேச்சு

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர... மேலும் பார்க்க

கரூர் பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி; தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு!

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட தவெக நிகழ்ச்சி, பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க