செய்திகள் :

கரூர் பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி; தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு!

post image

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட தவெக நிகழ்ச்சி, பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில்,

`அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி! அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.

பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம்.

ராஜ்மோகன் - தவெக
ராஜ்மோகன் - தவெக

பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன். எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

`கோயில் நிலத்தை முதல்வர் விஜய் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார்’- குற்றம்சாட்டும் நயினார்

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆயிரம் ... மேலும் பார்க்க

`களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? ஓடு... ஓடு... ஓடு' விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கி இருக்கி... மேலும் பார்க்க

`எமோஷனல் ஆன கரூர் குடும்பத்தினர்; கதறி அழுத முதல்வர் விஜய்!' - என்ன நடந்தது?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமனத்தை முதல்வர் விஜய் இன்று கொடுத்திருந்தார். இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எமோஷனல் ஆக, அதைப் ப... மேலும் பார்க்க

'15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு!' - குமுறும் தீயணைப்பு காவலர்கள்!

தங்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், முறையாக ஷிஃப்ட்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் தீயணைப்பு காவல்துறையினர் புகார் கூறிவருகின்றனர்Fire Policeதங்களுக்குரிய பிரச்னைகள் குறித்து சில தீயணைப்புத்த... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார் என்பது..!'- விஜய் பேச்சுக்கு கனிமொழி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முதல்வர் விஜய் முன்வை... மேலும் பார்க்க

தமிழ்நாடு இடைத்தேர்தல்: 5 தொகுதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட தடை; முன்னாள் MLA-களுக்கு செக்!

தமிழ்நாடு அடுத்து 6 தொகுதிகளில் இடைதேர்தலை நோக்கி காத்திருக்கிறது. அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் ஆகும். இதில் திருச்சி கிழக்கை தவி... மேலும் பார்க்க