செய்திகள் :

`களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? ஓடு... ஓடு... ஓடு' விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

post image

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கி இருக்கிறார்.

கரூர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தவிர "காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுத்ததா? கரூர் சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள்?" என கரூர் துயர சம்பவம் குறித்தும் பேசினார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், பதிவிட்டிருக்கிறார்.

அதில், `கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு..." என்று விமர்சித்திருக்கிறார்.

கரூர் பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி; தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு!

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட தவெக நிகழ்ச்சி, பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

`கோயில் நிலத்தை முதல்வர் விஜய் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார்’- குற்றம்சாட்டும் நயினார்

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆயிரம் ... மேலும் பார்க்க

`எமோஷனல் ஆன கரூர் குடும்பத்தினர்; கதறி அழுத முதல்வர் விஜய்!' - என்ன நடந்தது?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமனத்தை முதல்வர் விஜய் இன்று கொடுத்திருந்தார். இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எமோஷனல் ஆக, அதைப் ப... மேலும் பார்க்க

'15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு!' - குமுறும் தீயணைப்பு காவலர்கள்!

தங்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், முறையாக ஷிஃப்ட்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் தீயணைப்பு காவல்துறையினர் புகார் கூறிவருகின்றனர்Fire Policeதங்களுக்குரிய பிரச்னைகள் குறித்து சில தீயணைப்புத்த... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார் என்பது..!'- விஜய் பேச்சுக்கு கனிமொழி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முதல்வர் விஜய் முன்வை... மேலும் பார்க்க

தமிழ்நாடு இடைத்தேர்தல்: 5 தொகுதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட தடை; முன்னாள் MLA-களுக்கு செக்!

தமிழ்நாடு அடுத்து 6 தொகுதிகளில் இடைதேர்தலை நோக்கி காத்திருக்கிறது. அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் ஆகும். இதில் திருச்சி கிழக்கை தவி... மேலும் பார்க்க