செய்திகள் :

`இன்றைக்கும் அவர் என்னை ஜெயித்துவிட்டார்..!'- ஒளிப்பதிவாளர் செழியன் குறித்து விஜய் மில்டன் உருக்கம்

post image

பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று (ஜூலை 10) காலமானார். தமிழ் சினிமாவின் ஜாம்பவானான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர், செழியன்.

'கல்லூரி', 'ரெட்டைசுழி', 'மகிழ்ச்சி', 'தென்மேற்கு பருவக்காற்று', 'பரதேசி' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவு மட்டுமன்றி 'டூலெட்' (To Let) என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் செழியன்
ஒளிப்பதிவாளர் செழியன்

இத்திரைப்படம் 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான' உயரிய விருதைத் தட்டிச் சென்றதுடன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தது.

இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் செழியன் காலமானார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் வீடியோ பதிவு மூலம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் செழியன்
ஒளிப்பதிவாளர் செழியன்

வீடியோவில் பேசியிருக்கும் அவர், "கான்டக்ட் லிஸ்ட்டில் இனிமேல் எப்போதும் கால் பண்ணவே முடியாத, அதற்காக அந்த நம்பரை அழித்துவிடவும் முடியாத போன் நம்பர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இன்றைக்கு செழியன். அவரை மாதிரி அறிவார்ந்த ஒளிப்பதிவாளரை நான் பார்த்ததே இல்லை.

'கல்லூரி' படத்தில் செழியன் தான் ஒளிப்பதிவாளர். அவர் நன்றாகப் பண்ணிவிடுவாரா என்று அவருக்கும், எனக்கும் போட்டி இருந்தது. ஆனால் என்னை மிஞ்சி விட்டார். இன்றைக்கும் என்னை ஜெயித்துவிட்டார். எனக்கு முன்னாடியே அவர் சென்றுவிட்டார். விட்டுவிட மாட்டேன் செழியன்... பின்னாலேயே வருவேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்?!

பெற்றோர் அரவணைப்பின்றி வளரும் இதயாவுக்கு (அதர்வா), அவனுடைய மாமாவும் நண்பர்களும்தான் எல்லாம்! பள்ளிப் பருவத்தில் இதயா, டியூஷன், டென்னிஸ் பயிற்சி எனச் சுற்றி, சமந்தாவை (ப்ரீத்தி முகுந்தன்) ஒருதலையாகக் க... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: ``மோக்ஷாவா இருந்த என்னை மீனு டீச்சரா மாத்திட்டாரு" - எமோஷ்னலான நடிகை மோக்ஷா

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்ப... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: ``விஷ்ணுவுடன் 3 படங்கள் பண்ணதுக்கு எனக்கு 3 அவார்டுகள் கொடுக்கலாம்" - செல்லா அய்யாவு

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்பர் 2 அன்று வெளியான 'கட்டா குஸ்தி' முதல் ப... மேலும் பார்க்க

Gatta Kusti 2: ``என் வாழ்க்கையில் நான் நினைத்துக்கூட பார்க்காத.!" - கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்பர... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: ``மக்கள் நம்மை மறந்துவிட்டார்களோ என்ற பயம்" - நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்ப... மேலும் பார்க்க

கன்னத்தில் முத்தமிட்டால் : தாயின் பாடல் | அமுதாவின் கேள்விக்கு பதில்? | `சினி'ஸ்கோப் 05

`சினி'ஸ்கோப் 05கன்னத்தில் முத்தமிட்டால் : தாயின் பாடல்!ஒன்பது வயதே ஆகும் அமுதா, மிகப்பெரிய ஒரு போராட்டத்திற்கு பின்னர், தான் விருப்பப்பட்டபடியே தன்னை ஈன்ற அம்மாவைச் சந்திக்கிறாள். இந்தச் சந்திப்பு இத்... மேலும் பார்க்க