செய்திகள் :

தஞ்சாவூர்: நெல் மூட்டைகள் சரிந்து பெண் பணியாளர் பலியான சோகம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

post image

தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

இந்தக் கிடங்கில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பலியான பெண் ஊழியர்
பலியான பெண் ஊழியர்

இந்நிலையில் நெல் சேமிப்புக் கிடங்கில் இன்று வழக்கம் போல் தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மனைவி சின்னப்பொண்ணு(51), சகுந்தலா ஆகியோரும் தற்காலிக ஊழியராகப் பணிபுரிகின்றனர்.

இவர்களும் நெல் மூட்டைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் திடீரென் சரிந்து விழுந்தன. பணி செய்து கொண்டிருந்த சின்னப்பொண்ணு, சகுந்தலா மீது நெல் மூட்டைகள் விழுந்துள்ளன.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தினர். இதில் சின்னப்பொண்ணு மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். பலத்த காயம் அடைந்த சகுந்தலாவை சகப்பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை.
பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை.

இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆர்சுத்திப்பாடு கிராமத்திலும் விவசாயிகள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சின்னப்பொண்ணு குடும்பத்திற்கும், காயம் அடைந்த சகுந்தலாவிற்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழி... மேலும் பார்க்க

லாரி மீது பஸ் மோதி விபத்து; தீப்பிடித்தில் 7 பேர் பலி; பஸ்ஸில் சிகரெட் ஏற்றிச்சென்றதுதான் காரணமா?

மும்பை-டெல்லி இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் முடிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தச் சாலையில்... மேலும் பார்க்க

குரங்குகளுக்கு பழம் கொடுத்த புது மணப்பெண்; மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்... மேலும் பார்க்க

காவிரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; வீடியோ மோகத்தால் நிகழ்ந்த துயரம்

காவிரி ஆற்றுக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், மாண்டியா மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காவிரி ஆறுகர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க

Venezuela: வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்; அவசர நிலை அறிவித்த அதிபர்!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தலைநகர் காரகாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இந... மேலும் பார்க்க

`அப்பா, என்னைக் காப்பாத்துங்க' - லக்னோ தீயில் கருகிய மகனின் கடைசி அழைப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!

“அப்பா, இங்க தீப்பிடிச்சிருச்சு, என்னைக் காப்பாத்துங்க!” - இது வெறும் வார்த்தைகள் அல்ல. லக்னோ தீயில் கருகிப் போன 23 வயது இளைஞன் சுக்மணி சிங்கின் மரண ஓலம். திங்களன்று வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதிய... மேலும் பார்க்க