செய்திகள் :

`அதிமுக-வில் டிடிவி தினகரன் ரீ-என்ட்ரி?' - எடப்பாடியிடமே வைக்கப்பட்ட கோரிக்கை! - நடந்தது என்ன?

post image

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி நகர்ந்து வரும் அரசியல் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி அமைப்பை வலுப்படுத்தல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் அரசியல் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

அப்போது சில மாவட்ட நிர்வாகிகள், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சியை கட்சி தலைமையகம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “டிடிவி தினகரன் தற்போது தனியாக ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அப்படியிருக்கும்போது அவரை எப்படி அழைத்து வந்து கட்சியில் சேர்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டுமெனில் டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என்று சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக அதிமுகவின் சில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் வாக்கு சிதறலைத் தடுக்கவும், அதிமுக ஆதரவு வாக்குகளை ஒருங்கிணைக்கவும் டிடிவி தினகரனுடன் மீண்டும் இணக்கமான உறவை உருவாக்க வேண்டும் என்ற கருத்து கட்சியின் ஒரு பகுதியினரிடம் உருவாகி வருகிறது.

இதனால், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கை அதிமுகவின் எதிர்காலம் தொடர்பான விவாதங்களுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.

என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.!

``விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது: போர்க் கவசமாக இருந்து பாதுகாப்போம்" - வைகோ ஆவேசம்!

விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் காவல் அரணாக, போர்க் கவசமாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்திருக்கிறார். பல்லடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கர்நாடகா ... மேலும் பார்க்க

”விஜய், உதயநிதியைச் சமாளிக்க டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும்” - அதிமுக நிர்வாகி ஆலோசனை

சட்டமன்றத் தேர்தல் தோல்வி, அதிமுக எம்.எல்.ஏக்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் ஐக்கியமாகி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோ... மேலும் பார்க்க

`Last Bench'சர்ச்சை: அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள சமை... மேலும் பார்க்க

`எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு செயல்படும் அரசு' - த.வெ.க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.சென்னை தலை... மேலும் பார்க்க

”குடிக்க நல்ல தண்ணி இல்ல; சுவாசிக்க நல்ல காற்று இல்ல” - குப்பைக் கிடங்கால் புலம்பும் மக்கள்

தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூரி பெரியகோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இந்தக் குப்பைக... மேலும் பார்க்க

த.வெ.க. MLA-க்கள் பேர விவகாரம்: செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆஜராகவில்லை! - FIRல் அதிர்ச்சி தகவல்?

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகவில... மேலும் பார்க்க